காட்டுக்குள் அஜித் என்னலாம் பண்றாரு பாருங்க!.. விடாமல் துரத்தும் விடாமுயற்சி நடிகர்!.. செம பிக்ஸ்!
நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் தனது பைக் டீமுடன் டூர் கிளம்பிவிட்டார். தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்குமார் நடித்து வந்த நிலையில், அந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் இங்கு எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் படத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ளதாக அதிரடி அறிவிப்புகள் வெளியாகின.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் ரோல் சிம்பு பண்ணினா எப்படி இருக்கும்?.. இப்பவே போட்டியை ஆரம்பித்த எஸ்டிஆர் ரசிகர்கள்!
இந்நிலையில் மீண்டும் நடிகர் அஜித்குமார் தனது குழுவுடன் பைக் டூர் கிளம்பியுள்ள நிலையில், காடு போன்ற இடத்தில் தனது குழுவினருடன் அடுப்பை வைத்து சமைத்து சாப்பிட்டு, ஸ்னூக்கர் கேம் விளையாடும் புகைப்படங்களை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த பிக் பாஸ் ஆரவ் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், அஜித்துடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவரது பைக் டீமில் இவரும் இணைந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை கொண்டாடியது போல இருக்கு!.. கேரள ரசிகர்களுக்கு பெரிய ஐஸா வைத்த விஜய்!..
துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்குமார் பைக் டூர் சென்றபோது அந்த படத்தின் ஹீரோயினான மஞ்சு வாரியர் அஜித் குமாருடன் பைக் டோர்ஸ் சென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக பிக் பாஸ் ஆரவுக்கும் பைக் மீது காதல் ஏற்பட அஜித்குமார் காரணமாகி விட்டார் என்கின்றனர்.