Connect with us
RRR

Cinema News

கொடுத்து வச்சவருய்யா ராஜமௌலி… ஜப்பானில் அவருக்கு கெடைச்ச மரியாதையைப் பாருங்க…

பாகுபலியை இயக்கிய ராஜமௌலி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டார். அடுத்து ஆர்ஆர்ஆர் இயக்கியதும் உலகப்புகழ் அடைந்தார். அவரது இந்த அளவு முன்னேற்றத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அயராத உழைப்பு தான். ஒரு படத்திற்காக அவர் களம் இறங்கி விட்டால், அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் மட்டும் அதிகளவு நேரத்தை செலவிடுவாராம். அப்போது தான் படத்தை அவர் எதிர்பார்க்கும் தரத்திற்குக் கொண்டு வரமுடியும் என்பதே அவரது எண்ணம்.

அந்தத் திட்டமிடல் உறுதியானதும் தான் படப்பிடிப்பு தளத்திற்கேச் செல்வாராம். அவர் ஆர்ஆர்ஆர் இயக்கி 2 ஆண்டுகள் ஆகியும் மகேஷ்பாபுவுடன் தொடர உள்ள படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

தற்போது ஜப்பானில் ஆர்ஆர்ஆர் படம் 500வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்தப் படத்தின் 513வது நாளில் அங்குள்ள திரையரங்கு ஒன்றில் நடந்த சிறப்புக்காட்சியில் ராஜமௌலி கலந்து கொண்டார்.

Rajamouli

Rajamouli

அப்போது அவர் மகேஷ்பாபுவுடனான தனது படம் குறித்து இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் படத்திற்கான ஸ்கிரிப்டை முடித்துவிட்டோம். இப்போது முன் தயாரிப்பு பணியில் இருக்கிறோம். ஹீரோ மட்டும் உறுதியாகி விட்டார். அவர் பெயர் மகேஷ்பாபு. மிகவும் அழகானவர். படத்தின் தயாரிப்புக்கான வேலைகளை விரைந்து முடிப்போம். அதன் வெளியீட்டின்போது மகேஷ்பாபுவை நான் இங்கு அழைத்து வருவேன் என நம்புகிறேன்.

இதையும் படிங்க… என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..

அவரைத் தவிர பிற நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றார். ஜப்பானில் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது ராஜமௌலிக்கு பிற நாடுகளில் இருந்து கிடைத்த அன்பைப் பார்க்கும்போது உண்மையிலேயே அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் தான் என்று தெரிகிறது.

ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு படத்திற்கு இசை அமைப்பாளர் மரகதமணிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அதே போல பாடலை எழுதிய சந்திர போஸ்க்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது நாட்டுக்கே பெருமையான ஒரு விஷயம் என அப்போது பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின.

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top