Connect with us

Review

ரெபல் படம் கதையாவே தப்பு!.. ஜி.வி. பிரகாஷ் படத்தை பஞ்சர் பண்ண ப்ளூ சட்டை மாறன்!..

அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என வெளியான ரெபல் படத்தை ப்ளூ சட்டை மாறன் பஞ்சர் செய்துள்ளார். உண்மை சம்பவமாகவே இருந்தாலும் அந்த கதையில் உப்பு சப்பு இல்லை என முதல் பந்திலேயே க்ளீன் போல்டு செய்துள்ளார்.

மொழி வாரி மாநிலமாக தமிழ்நாட்டையும் கேரளாவையும் பிரிக்கும் போது கன்னியாகுமரி நமக்கும் மூணாறை கேரளாவுக்கும் கொடுத்து விடுகின்றனர். மூணாறில் வசித்து வரும் தமிழர்கள் தேயிலை தோட்டத்தில் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷ் முதல் ஷாலினி வரை!.. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை சேப்பாக்கத்தில் கொண்டாடிய பிரபலங்கள்!..

தங்கள் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும் என நினைத்து பாலாக்காட்டில் உள்ள கல்லூரியில் சேர்க்கின்றனர். கதிர் எனும் கதாபாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். நண்பன் கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார்.

கேரள கல்லூரியில் தமிழ் மாணவர்களை மலையாள மாணவர்கள் சேர்ந்துக் கொண்டு ரேகிங் டார்ச்சர் செய்ய, ஒட்டுமொத்த மாணவர்களையும் தமிழ் மாணவர்கள் அடித்து நொறுக்கும் கதை தான் இந்த ரெபல் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா – பாரதிராஜா – கண்ணதாசன் கூட்டணி!… அரைமணி நேரத்தில் உருவான ஹிட் பாடல்!..

மேலும், கதை எந்த இடத்திலும் சுவாரஸ்யமாக இல்லை என்றும் 500 படங்களில் பார்த்து அழுத்துப் போன கதையை மீண்டும் எடுத்து வைத்திருக்கின்றனர். கேரளாவுக்குப் போய் தமிழர்கள் மலையாளிகளை அடித்தால் அந்த ஊர் போலீஸ் சும்மா இருக்குமா? என ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளும் இருக்கிறது. பிரேமலு ஹீரோயினை போட்டு ஏமாத்திடலாம் என நினைத்தாலும் ஹீரோயினுக்கும் பெருசா வேலை இல்லை பெரிய பல்பு தான் கிடைத்தது என்று விமர்சித்திருக்கிறார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Review

To Top