Cinema History
அந்த எம்.ஜி.ஆர் படத்தில் பிடிக்காமல்தான் நடித்தேன்!. ஓப்பன் பேட்டி கொடுத்த ஜெயலலிதா!..
சினிமாவில் நடிக்கவே விருப்பமில்லை என்றாலும் குடும்ப சூழ்நிலையாலும், அம்மா வற்புறுத்தியதாலும் நடிக்க வந்தவர் ஜெயலலிதா. ஏனெனில் அவரின் எண்ணமெல்லாம் கலெக்டர் ஆக வேண்டும் என்பதில் இருந்து. ஆனால், சினிமா அவரை விடவில்லை. வெண்ணிற ஆடை படம் நடிக்க துவங்தினார்.
அவரின் அதிர்ஷ்டம் அடுத்த படமே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்புதான். அதுதான் அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் அடிமைப்பெண், கணவன், அரச கட்டளை, நம் நாடு, அன்னமிட்ட கை, குடியிருந்த கோவில், மாட்டுக்கார வேலன் என பல படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: இந்த பாட்டுல நான் நடிக்க மாட்டேன்!. அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. பின்னாடி அவர் படம்னாலே அதுதான்!..
ஒருகட்டத்தில் அவரே நினைத்தாலும் சினிமாவிலிருந்து விலக முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. அதோடு, எம்.ஜி.ஆருடன் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மனக்கச்சப்பில் அவரின் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். மேலும், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.
இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் ஜெயலலிதாவை அவரால் தடுக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் 100வது திரைப்படம் திரைமாங்கல்யம். அப்போது ஒரு வாரப்பத்திரிக்கையில் அவரின் பேட்டி வெளியானது. அதில் ‘எம்.ஜி.ஆருடன் நான் 28 படங்களில் நடித்துள்ளேன். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது ஆயிரத்தில் ஒருவன்’ என்று மட்டும் சொன்னார். எம்.ஜி.ஆரை பற்றி எதுவுமே குறிப்பிடைவில்லை.
இதையும் படிங்க: கமலுக்கு முன்பே பல கெட்டப்புகளை போட்ட எம்.ஜி.ஆர்!.. அதுவும் அதே டைட்டில்!. நடந்தது இதுதான்!..
மேலும், ‘சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் முதன் முதலாக நடித்தேன். அதில் நான் அவரின் 3வது மகளாக நடித்தேன். அவருடன் நடித்த 2வது படம் கந்தன் கருணை. இதிலும் அவருக்கு நான் ஜோடியில்லை’ என சிவாஜியுடன் ஜோடியாக நடிக்க முடியாமல் போன ஆதங்கம் பற்றி சொல்லி இருந்தார்.
அதேநேரம், எம்.ஜி.ஆருடன் ஜோடி போட்டு நடித்த ஆயிரத்தில் ஒருவன் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. அதோடு. ‘எம்.ஜி.ஆரின் 100வது படமான ஒளிவிளக்கு படத்தில் விருப்பமில்லாமல்தான் நடித்தேன்’ என சொன்னார். மேலும், ‘நீரும் நெருப்பும் இணைந்தால் என்ன வரும்? புகைதான் வரும்’.. என கமெண்ட் அடித்திருந்தார். அதாவது, நீரும் நெருப்பும் ஒரு தோல்விப்படம் என மறைமுகமாக அப்படி சொல்லியிருந்தார்.