கமலுக்கு முன்பே பல கெட்டப்புகளை போட்ட எம்.ஜி.ஆர்!.. அதுவும் அதே டைட்டில்!. நடந்தது இதுதான்!..

Mgr: தமிழ் சினிமாவில் தனது கெட்டப்பை மாற்றி வேறுமாதிரியான மேக்கப் போட்டு நடிக்கும் நடிகர்கள் மிகவும் குறைவு. இன்னொன்று அது எல்லோருக்கும் பொருந்தும் என சொல்லவும் முடியாது. வாலிப வயதிலேயே சிவாஜி 70 வயது முதியவராக நடிப்பர். அதேபோல், 50 வயது நடுத்தர வயதுள்ளவராகவும் வருவார். 80வயது முதியவர் வேடத்தில் சீரியஸாக நடிப்பார்.

அவருக்கு எல்லா வேடமும் செட் ஆகும். ஒரே படத்தில் அப்பா - மகன் என பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆரோ கதாநாயகியை ஏமாற்றுவதற்காக முதியவர் போல வேடமணிந்து வந்து ஒரு பாட்டு பாடுவார். அவ்வளவுதன் அவரின் வித்தியாசமான கெட்டப். முழுக்க அப்படி ஒரு வேடத்தில் நடிப்பது நமக்கு செட் ஆகாது என்பது எம்.ஜி.ஆருக்கு தெரியும்.

இதையும் படிங்க: உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..

சிவாஜிக்கு பின் அதை செய்தவர் கமல்ஹாசன். இவருக்கும் பல கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்பதில் தீராத தாகம் உண்டு. அதனால்தான் இளம் வயதிலேயே இவரும் அப்பா வேடங்களில் நடித்திருக்கிறார். நாயகன் படத்தில் 3 வேடங்களில் வருவார் கமல். முதியவராகவும் ஒரு வேடத்தில் வருவார். சலங்கை ஒலி படத்திலேயே இதை செய்திருப்பார்.

தமிழ் சினிமா மேக்கப்பில் புது யுக்திகளை கொண்டு வந்தார் கமல். மும்பை மற்றும் ஹாலிவுட்டிலிருந்து மேக்கப்மேன்களை கொண்டு வந்தார். கமலை பின்பற்றிதான் மற்ற நடிகர்களும் அதை செய்தனர். தேவர் பிலிம்ஸ் நிறுவனர் தேவருக்கு எம்.ஜி.ஆரை வைத்து ஒரு துப்பறியும் கதையை படமாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நம்பியாரை வைத்து எடுத்த ‘திகம்பர சாமியார்’ படம் போல இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அந்த படத்தில் ஒரு வழக்கறிஞரால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதை தெரிந்துகொண்ட நம்பியார் பல வேடங்களில் சென்று அவர்களை காப்பாற்றுவதோடு, அந்த வழக்கறிஞரின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுவதுதான் கதை.

அது போல படம் எடுக்க ஆசைப்பட்ட தேவர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாசிரியர் ரவீந்தரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த கதையில் எம்.ஜி.ஆர் 10 வேடங்களில் வருவதாக முடிவு செய்யப்பட்டது. இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த தலைப்பு தசாவதாரம். ஆனால், அந்த படம் நின்று போனது. அதன்பின் 2008ம் வருடம் கமலின் நடிப்பில் தசாவதாரம் என்கிற தலைப்பில் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story