உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பைத் தவிர தன் மனதில் எதையும் நிலை நிறுத்திக் கொள்ளாதவர். நடிப்புதான் மூச்சு, பேச்சு என்று தன் வாழ்நாள் முழுவதும் இருந்து தமிழ் திரை உலகில் பல சாதனைகளை செய்தவர் நம் சிவாஜி கணேசன்.

இவருடைய நடிப்பில் எத்தனையோ படங்கள் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருந்து வருகின்றன. இவரின் படங்களை பார்த்து ஏராளமான புதுமுக நடிகர்கள் நடிப்பை கற்று இந்த தமிழ் திரை உலகிற்கு அடியெடுத்து வைத்த வண்ணம் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்நேரம் கேப்டன் மட்டும் உயிரோட இருந்தா சவுக்கடி நிச்சயம்! கம்முனு இருந்த பிரேமலதா

அதே சமயம் சிவாஜி கொஞ்சம் முன் கோபக்காரர். மிகவும் சீரியஸ் ஆனவர் என பல பேர் சொல்லி பேட்டிகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவருக்குள்ளும் எந்த அளவு ஒரு நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறது என்பதை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் ஒரு சம்பவத்தின் மூலம் உணர்த்தி இருக்கிறார்.

சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான படம் 'சுமதி என் சுந்தரி'. அந்தப் படத்தை தயாரித்தவர் நாராயண சுப்ரமணியன். படத்தின் இயக்குனர் சிவி ராஜேந்திரனை அழைத்த சிவாஜி இந்த படத்தின் டைட்டிலை எப்படி தயாரிக்கப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சி.வி. ராஜேந்திரன் இனிமேல் தான் யோசனை செய்ய வேண்டும் என சொன்னாராம். உடனே சிவாஜி நான் ஒரு காட்டுக்குள் போய்க்கொண்டிருக்கின்றேன். அங்கு ஒரு யானை குறுக்கே வருகின்றது. உடனே ஒரு துப்பாக்கியால் அந்த யானையை நான் சுடுவது போல காட்சியை படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே ஒரு யானையை கொண்டு வாருங்கள் என ராஜேந்திரனிடம் சிவாஜி சொன்னாராம்.

இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..

அதோடு படத்தின் தயாரிப்பாளர் நாராயண சுப்ரமணியனையும் அழைத்து போய் உடனே ஒரு யானையை வாங்கி வாருங்கள். இந்த காட்சியை படம் எடுத்து விடலாம் என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றாராம். இதைக் கேட்டதும் தயாரிப்பாளர் நாராயணன் சுப்பிரமணியத்திற்கு கதிகலங்கி விட்டதாம். ஒரு யானையின் விலை என்ன? இவர் பாட்டுக்கு சொல்லிவிட்டு போய்விட்டாரே. யானையை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? என நினைத்து புலம்பிக் கொண்டிருந்தாராம் நாராயண சுப்ரமணியன்.

உடனே பிரபல கதை ஆசிரியரான சித்ராலயா கோபுவை அழைத்து சிவாஜி திடீரென ஒரு யானையை கேட்கிறார். அவரை நீங்கள் தான் சமாதானம் செய்ய வேண்டும் என நாராயண சுப்ரமணியன் சொல்லியிருக்கிறார். அன்று முழுவதும் சித்ராலயா கோபு சிவாஜியை எப்படி சமாளிப்பது என யோசித்து விட்டு மறுநாள் படப்பிடிப்பிற்கு வந்தாராம்.

இதையும் படிங்க:‘குடி’னா ஆண், பெண் இருவருக்கும் சமம்! ஏதோ சொல்லப் போய் வசமாக சிக்கிய விஜய் ஆண்டனி

அங்கு சிவாஜியை பார்த்ததும் சித்ராலயா கோபு ‘நேற்று நீங்கள் ஒரு யானை கேட்டதாக சிவி ராஜேந்திரன் என்னிடம் சொன்னார். உங்கள் பெயரும் கணேசன், யானையையும் கணேசன் என்றே அழைப்பார்கள். அதனால் நீங்களே அந்த யானையை சுடுவது என்பது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’ என்று சொன்னதும் சிவாஜி குபீர் என சிரித்தாராம்.

நாராயண சுப்ரமணியனிடம் நான் இதைக் கேட்டதும் மறுநாள் நீ வருவாய் என எனக்கு நன்றாக தெரியும். அது மட்டும் அல்லாமல் நேற்று நாராயண சுப்ரமணியன் மிகவும் சந்தோஷமாக பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தான். அவனிடம் சீரியஸ் ஆக ஏதாவது விளையாட வேண்டுமே என்ற நினைத்து நான் இந்த யானையை கேட்டேன். எனக்கு தெரியாதா யானையை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? என சொல்லி சிரித்தாராம் சிவாஜி.

 

Related Articles

Next Story