Connect with us
anto

Cinema News

‘குடி’னா ஆண், பெண் இருவருக்கும் சமம்! ஏதோ சொல்லப் போய் வசமாக சிக்கிய விஜய் ஆண்டனி

Vijay Antony: தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் தனக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களிடம் தனி வரவேற்பை பெற்றவர். இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இளசுகளை துள்ளல் போடும் அளவுக்கு குத்தாட்ட பாடல்களாகவே அமைந்திருக்கும். மற்ற இசையமைபபாளர்களின் எந்த சாயலும் இல்லாமல் தனித்துவமாகவே இவரது இசை இருக்கும்.

இவர் பாடல்கள் பெரும்பாலும் புரியாத வகையில் அமைந்திருந்தாலும் அவையனைத்தும் மக்களிடையே நல்ல ஒரு ரீச்சை அடைந்தது. உதாரணமாக மாக்காயாலா மாக்காயாலா மற்றும் நாக்க முக்க நாக்க முக்க போன்ற பாடல்களுக்கு இன்றுவரை ஒரு க்ரேஷ் இருந்து கொண்டுதான் வருகின்றன. குத்துப் பாடல்களை மட்டும் போட்டுத்தான் ஆட்டம் போட வைப்பாரா என்றால் இல்லை.

இதையும் படிங்க: எப்பா மொத்தமும் காப்பியா?!. சொந்த சரக்கே இல்லையா?!.. ஹாலிவுட்டிலிருந்து சுட்ட குட் பேக் அக்லி!..

மெலோடிஸ் பாடல்களாலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்போது நடிகராகவும் மக்களின் அபிமானங்களை பெற்று வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி இப்போது சமீபத்தில் ரோமியோ என்ற படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இந்தப் படத்தின் போஸ்டரே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். முதலிரவில் கணவனும் மனைவியும் சேர்ந்து மது குடிப்பது மாதிரியான போஸில் விஜய் ஆண்டனியும் ஹீரோயினும் உட்கார்ந்திருப்பார்கள்.

இதை பற்றி நிருபர் ஒருவர் பெண்களும் குடிக்கலாமா? என்று கேட்டார். ஆண் குடிக்கிறார் என்றால் பெண்ணும் குடிக்கலாம். ஆண், பெண் இருவரும் சமம்தானே என்று சொல்லி கலாய்த்தார். தமிழகத்துல மதுவை ஒழிக்கனும்னு போராடுறோம். அப்போ குடியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்ற மற்றொரு கேள்வியை நிருபர் கேட்க ‘அப்படியெல்லாம் இல்லை. ஜீஸஸ் காலத்தில் இருந்தே குடி என்பது வெவ்வேறு பெயர்களில் புழக்கத்தில் இருந்துதான் வந்திருக்கின்றன.’ என்று கூறினார்.

இதையும் படிங்க: ஈஸ்வரியிடம் நெருங்கும் ராதிகா…விலகும் பாக்கியா… என்னங்க நடக்குது இங்க?

அதனால் ஜீஸஸும் குடித்தார் என்று சொல்ல வருகிறீர்களா? என்று கேட்க அதற்கு விஜய் ஆண்டனி அப்படியெல்லாம் சொல்ல வரலை என்று சிரித்துக் கொண்டே விலகிவிட்டார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top