Connect with us
MGR, VK, BLee

Cinema History

எம்ஜிஆர் பார்முலாவைக் காப்பி அடித்த புருஸ்லீ… எப்படி தெரியுமா? கேப்டன் சொல்வதைக் கேளுங்க…

விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று சொல்வார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று அடைமொழி கொடுத்ததைப் போல விஜயகாந்துக்கு புரட்சிக்கலைஞர் என்று ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள். இதில் இருந்து பார்க்கும் போது எம்ஜிஆரை விஜயகாந்த் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை உணர முடிகிறது.

அந்த வகையில் எல்லா நடிகர்களுக்குமே எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களையும் பிடிக்கும். எம்ஜிஆர் போல அரசியலில் இறங்கி விஜயகாந்த் சாதித்து வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரால் எதிர்பார்த்த வெற்றியைத் தர முடியவில்லை.

எம்ஜிஆரைப் போல வாரி வழங்கும் கொடை வள்ளலாக விஜயகாந்தும் திகழ்ந்தார். அப்படி இருக்க, கேப்டன் விஜயகாந்த் எம்ஜிஆரின் ரசிகன் ஆக இவ்ளோ விஷயங்கள் இருக்கா? என்னென்ன என்று அவரே பிரபல நாளிதழுக்காக கொடுத்த பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். பார்க்கலாமா…

மறக்க முடியாத நபர் என்றால் எம்ஜிஆர் தான். அவரது தீவிர ரசிகர் நான். டிவியில் அவரது பாடல் வந்தால் வேறு எந்த சேனலையும் பார்க்க மாட்டேன்.

இதையும் படிங்க… ‘இனிமேல்’ ஆல்பத்தில் நடிச்சதுக்கு காரணமே இதுதான்!.. உண்மையை போட்டு உடைத்த லோகேஷ்!..

அவரது சினிமா ரிலீஸானால் தியேட்டரில் முந்தைய நாள் இரவே போய் படுத்திருந்து மறுநாள் காலையில் மற்றவர்கள் தலைமேல் ஏறிச்சென்று ஓடி முதல் டிக்கெட் வாங்கியிருக்கிறேன். இன்று நான் ஒரு நடிகன். அவர் சினிமாவில் அந்தக் காலத்தில் என்னென்ன டெக்னிக்கைக் கையாண்டு இருக்கிறார் என்று இப்போது தான் உணர முடிகிறது.

Adimaipenn

Adimaipenn

அன்று பத்திரிகையில் எம்ஜிஆருக்கு ரத்தம் வந்தால் கோபம் வரும் என்று கிண்டல் செய்தனர். அன்று எல்லோரும் சொல்லும் போது எங்களுக்குக் கோபம் வரும். அதை புருஸ்லீயும் செய்து இருக்கிறார். எம்ஜிஆர் கடைபிடித்த பார்முலாவை மற்றொருவர் கடைபிடித்து இருக்கிறார். தனிப்பட்ட முறையில் ரசிகனாக இருந்து ரசித்த போது அவரை பெரிய அறிவாளியாகக் கருதினேன்.

எம்ஜிஆர் படத்தில் எப்போதும் ஒரு விஷயத்தைச் சொல்வார். நல்ல பாடல்கள் இருக்கும். அடிமைப்பெண் படத்தில் சிங்கத்துடன் போடும் சண்டையில் அருமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பார். இதனால் தான் நான் எம்ஜிஆரின் ரசிகன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top