செந்தூரப்பாண்டி படப்பிடிப்பில் கேப்டன் செய்த செயல்!.. நெகிழ்ந்து போன விஜய்!.. என்ன மனுஷன்யா?!..

Published on: March 29, 2024
vijiayakanth
---Advertisement---

தமிழ் திரையுலகில் ஈகோ இல்லாத ஒரே நடிகர் எனில் அது விஜயகாந்த் மட்டுமே. துவக்கம் முதல் கடைசி வரை தலையில் தலைக்கணத்தை ஏற்றிக்கொள்ளாதவர். வெற்றியையும், தோல்வியையும் ஒரே மாதிரி பார்த்தவர் இவர். அதற்கு காரணம் திரையுலகில் இவர் சந்தித்த அனுபவங்கள்தான்.

விஜயகாந்துக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. அவராகவே போராடித்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். பல அவமானங்கள், தோல்வியை பார்த்துவிட்டுதான் அவர் வெற்றியை பார்க்க துவங்கினார். விஜயகாந்தை வளரவிடாமல் தடுக்க பல சதிகளும் நடந்தது. அதையெல்லாம் உடைத்து முன்னேறியவர் அவர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நடித்து பீதியை கிளப்பிய திரில்லர் படங்கள்!.. மறக்க முடியாத ஊமை விழிகள்!…

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து, ரசிகர் கூட்டத்தை பெற்ற பின்னரும் எளிமையான, ஈகோ இல்லாத ஒரு நடிகராகவே அவர் இருந்தார். அதாவது, அவரது தொழில் நடிப்பு என்றாலும் தன்னை ஒரு பெரிய ஸ்டாராக அவர் எப்போதும் உணர்ந்தது இல்லை. அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது.

விஜயகாந்தை வைத்து 18 படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் மூலம்தான் ரசிகர்கள் கவனிக்கும் ஒரு ஹீரோவாக விஜயகாந்த் மாறினார். எனவே, அவர் மீது கடைசிவரை அன்பும், மரியாதையும் வைத்திருந்தார் விஜயகாந்த். எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜயை சினிமாவில் வளர்க்க படாத பாடுபட்ட நேரம் அது.

இதையும் படிங்க: நடிக்க மறுத்த விஜயகாந்த்!. பிரபு, சத்தியராஜ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள்!..

சொந்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சில படங்களில் விஜயை நடிக்க வைத்தும் பெரிய ரீச் இல்லை. எனவே, அப்போது பிரபலமாக இருந்த ஹீரோக்களுடன் மகன் விஜய் நடித்தால் ரீச் கிடைக்கும் என திட்டமிட்டு பல நடிகரையும் அணுகினார். ஆனால், யாரும் சம்மதிக்கவில்லை. ஆனால், விஜயகாந்தோ எஸ்.ஏ.சி கேட்டதுமே சம்மதித்தார்.

அப்படி உருவான திரைப்படம்தான் செந்தூரப்பாண்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது விஜயகாந்தை பார்க்க ரசிகர் கூட்டம் கூடுமாம். அப்போது விஜயை அழைத்து அருகில் நிற்க வைத்து ‘நீயும் அவர்களை பார்த்து கை அசை. இது உனக்கும்தான். பின்னாளில் இது உனக்கும் கிடைக்க வேண்டும்’ என சொல்வாராம் விஜயகாந்த். இதில் நெகிழ்ந்து போனாராம் விஜய். விஜயகாந்த் ஆசைப்பட்டது போலவே விஜயும் பின்னாளில் பெரிய நடிகராக வளர்ந்து தனக்கென ரசிகர் கூட்டத்தையும் பெற்றார்.

இதையும் படிங்க: கேட் ஏறி குதித்த கேப்டன் விஜயகாந்த்!.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன இயக்குனர்..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.