கேட் ஏறி குதித்த கேப்டன் விஜயகாந்த்!.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு நெகிழ்ந்து போன இயக்குனர்..

விஜயகாந்த் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியும். தனக்கு முன் யாரும் கஷ்டப்படக்கூடாது, யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என நினைப்பார். மேலும், தன்னால் முடிந்த உதவிகளை எப்போதும் பலருக்கும் செய்து கொண்டே இருப்பார். குறிப்பாக தனக்கு தெரிந்து யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.

இத்தனைக்கும் விஜயகாந்த் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இல்லை. கஷ்டத்தோடு வளர்ந்தவர் அவர் இல்லை. சிறு வயதிலேயே ஹாஸ்டலில் தங்கி படித்தவர். சொந்தமாக ஒரு ரைஸ் மில்லை நடத்தியவர் இவர். சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

இதையும் படிங்க: போயஸ் கார்டனில் வசிக்கும் திரை பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டா பெருசா போகுதே!…

பல அவமானங்களை தாண்டி வாய்ப்புகள் கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிதான் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பெரிய நடிகராக இருந்தும் யாரையும் கஷ்டப்படுத்தமாட்டார். உதாரணத்திற்கு, படப்பிடிப்பு முடிந்து அறைக்கு போகிறார். அங்கு அவரின் உதவியாளரோ அல்லது படக்குழுவை சேர்ந்த ஒருவரே அவரின் பெட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார் என்றால் அவர்களை எழுப்ப மாட்டார்.

ஒரு பெட்ஜிட்டை கீழே விரித்து படுத்து உறங்கி அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்து முடித்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விடுவார். அந்த அளவுக்கு எளிமையானவர். இந்நிலையில், அவரின் அலுவகத்தின் உள்ளே செல்ல அவரே கேட் ஏறி குதித்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து அதிகாலை 3 மணிக்கு அவரின் அலுவலகத்திற்கு போனோம். கேட் சாத்தப்பட்டிருந்தது. உள்ளே காவலாளி தூங்கி கொண்டிருந்தார். அவருக்கு 60லிருந்து 65 வயது இருக்கும். கார் டிரைவர் உடனே ஹாரன் அடிக்கப்போனார். அவரை தடுத்தார் விஜயகாந்த்.

கீழே இறங்கி என்னை அலேக்காக தூக்கி கேட்டின் உள்ளே போட்டார். அதன்பின் அவர் கேட் ஏறி குதித்தார். ‘அவரை எழுப்பி இருக்கலாமே’ என நான் கேட்டேன். அதற்கு விஜயகாந்த் ‘பாவம் வயதானவர். இப்போது எழுப்பிவிட்டால் அதன்பின் தூக்கம் வராது. தூங்கட்டும்’ என்று சொன்னார். அவரின் மனிதாபிமானத்தை பார்த்து வியந்து போனேன்’ என செல்வமணி கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story