போயஸ் கார்டனில் வசிக்கும் திரை பிரபலங்கள்!.. அட லிஸ்ட்டா பெருசா போகுதே!...

நடிகர்கள் மற்றும் பிரபலங்களால் புடைசூழப்பட்டுள்ளது போயஸ் கார்டன். இந்தியாவே உற்றுப்பார்க்கும் நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது சென்னை. இனம், மொழி, மதம், சாதி இவற்றையெல்லாம் கடந்து வெறும் நம்பிக்கையோடு வந்து சென்னையில் தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

இப்பேற்பட்ட புகழ் மிக்க சென்னையின் முக்கிய வசிப்பிடமாக பார்க்கப்படுவது போயஸ் கார்டன். இங்கே குடியிருந்து வருபவர்களில் பலரும் முகம் அறியப்பட்ட பிரபலங்களே. தேனி மாவட்டத்திலிருந்து சினிமாவில் வெற்றி என்கின்ற குறிக்கோளோடு வந்து இன்று முன்னனி இயக்குனராக இருப்பவரான பாலாவின் வீடும் இங்கே தான் இருக்கின்றது.

இதையும் படிங்க: முதல் 50 கோடி வசூலை கொடுத்த தமிழ்ப்படங்கள்! இந்த பெருமைக்கு சொந்தக்காரரான முதல் நடிகர்

"தினத்தந்தி" பத்திரிக்கையின் முதன்மை தொகுப்பு ஆசிரியராக இருந்து மறைந்த சிவந்தி ஆதித்தனாரின் வீடும் இங்கேயே உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் இடையே ஏற்பட்ட மனவருத்தங்களுக்கு காராணமானதும் இந்த போயஸ் கார்டன்தான் என சொல்லப்படுவதுண்டு..

இவர்கள் இருவரின் இல்லங்களும் அருகருகே இருப்பதால் ஜெயலலிதாவின் பாதுகாப்பு காரணங்களால் போக்குவரத்தில் மாற்றம் அடிக்கடி செய்யப்பட்டது ரஜினியை முகம் சுளிக்க வைத்தது. இப்படிப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்ந்து வந்த வீடு இன்று அவரது அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக்கின் பராமரிப்பில் இங்குதான் இருந்து வருகிறது.

பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதும் அவர்களை பார்த்து கைகாட்டுவதும் இன்று வரை இவரது பிருந்தாவன் இல்லத்தில் வைத்துதான் நடந்து வருகிறது. அதேபோல், ரஜினியின் முன்னாள் மருமகன் மற்றும் நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் செலவில் கட்டி முடுத்துள்ள அவரது பிரம்மாண்ட புது வீடும் இங்கேதான் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: அஜித்திடம் கால்ஷீட் வாங்க ஒரே வழி இதுதான்!. நடிகையை வச்சி ரூட்டு போட்ட இயக்குனர்…

இந்த வீடு கட்டப்பட்டு வரும் போது தான் ஐஸ்வர்யா, தனுஷ் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. ஆனால் சிறப்பாக நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் தனது தாயார் லதாவுடன் ஐஸ்வர்யா வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவும் இங்கேயே தற்பொழுது புதுவீடு ஒன்றை வாங்கியுள்ளார். கட்டிட பணிகள் முடிவடைந்ததும் இங்கு குடியேற திட்டமிட்டுள்ளார். இவரைப்போலவே ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக பார்க்கப்படும் சசிகலாவின் வீடும் இங்கேதான் இருக்கிறது. நவரச நாயகன் கார்த்திக், அரவிந்த்சாமி, வில்லன், குனச்சித்திர நடிகரான சரண்ராஜின் குடியிருப்பும் போயஸ்கார்டனில்தான் அமைந்திருக்கிறது.

 

Related Articles

Next Story