Connect with us
vijay

Cinema News

முதல் 50 கோடி வசூலை கொடுத்த தமிழ்ப்படங்கள்! இந்த பெருமைக்கு சொந்தக்காரரான முதல் நடிகர்

50 crore collection movie: தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் எப்படியாவது தங்கள் படங்களின் மூலம் அந்த 100 கோடி கிளப்பில் இணைந்து விடலாம் என்று தான் போராடிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 50 கோடி வசூலை பெற்றுத் தந்த முதல் பத்து படங்களை பற்றி தான் இந்த லிஸ்டில் பார்க்க இருக்கிறோம்,

கார்த்தி நடிப்பில் வெளிவந்த தோழா திரைப்படம் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் 96 கோடி வசூலை பெற்று தந்தது. இந்த படத்தை வாரிசுப் பட இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படம் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமாராக 59 கோடி அளவில் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அஜித்திடம் கால்ஷீட் வாங்க ஒரே வழி இதுதான்!. நடிகையை வச்சி ரூட்டு போட்ட இயக்குனர்…

இதன் மூலம் சிவகார்த்திகேயன் முதன் முதலாக 50 கோடி கிளப்பில் கால் வைத்த படமாக இந்த ரஜினி முருகன் திரைப்படம் அமைந்தது. அதேபோல தனுஷும் 50 கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறார். அதுவும் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் இந்த 50 கோடி கிளப்பில் இணைந்தவர் தனுஷ். சிவகார்த்திகேயனுக்கு முன்பாகவே தனுஷ் 50 கோடி கிளப்பில் இணைந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.

அடுத்ததாக அஜித்தும் இந்த 50 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறார். அவர் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு திரைப்படம் தான் அஜித் முதன் முதலாக 50 கோடி கிளப்பில் இணைவதற்கு காரணமாக அமைந்த படம். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

அஜித்துக்கு முன்பாகவே சூர்யாவும் அந்த 50 கோடி கிளப்பில் இணைந்து விட்டார். கஜினி படத்தின் மூலம் சூர்யா 50 கோடி கிளம்பில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் அசின் மிகச்சிறந்த நடிகை என்ற விருதையும் வாங்கி இருக்கிறார். கஜினி படம் உலக அளவில் 68 கோடி வசூலை பெற்று இந்த படத்தின் மூலம் முதன் முதலாக சூர்யா 50 கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட சித்தார்த்… மணிரத்னம் ஹீரோயினை தட்டி தூக்கிட்டாருப்பா!

விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படமும் இந்த 50 கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் மூன்று கெட்டப்புகளில் நடித்து அனைவரையும் அசத்தியிருப்பார். சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக வெளியான இந்த அந்நியன் திரைப்படம் கிட்டத்தட்ட 58 கோடி வசூலை உலக அளவில் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

அடுத்ததாக ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படமும் இந்த 50 கோடி அளவில் இணைந்த படமாக கருதப்படுகிறது. வெறும் குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 40 நாட்களில் உலக அளவில் 58 கோடி வரைக்கும் வசூலை படைத்திருக்கிறது. ஜெயம் ரவிக்கு இந்த படம் தான் முதன் முதலில் 50 கோடி வசூலை பெற்று தந்த படமாக சொல்லப்படுகிறது.

அடுத்ததாக விஜயின் கரியரில் மிக முக்கிய படமாக கருதப்பட்ட கில்லி திரைப்படமும் இந்த 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். மகேஷ் பாபு நடித்த ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த கில்லி திரைப்படம். தெலுங்கில் 39 கோடி வசூலை பெற்ற அந்த ஒக்கெடு திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட பிறகு 50 கோடிக்கு மேலாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இதையும் படிங்க: ரசிகர்கள் விரும்பாத நாகேஷ் – பத்மினி ஜோடி!.. அதே கதையை வேறலெவலில் காட்டி ஹிட் கொடுத்த பாலச்சந்தர்

விஜய்க்கு இதுதான் முதன்முதலில் 50 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என சொல்லப்படுகிறது. கடைசியாக கமல் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படமும் 50 கோடி கிளப்பில் இணைந்துள்ள படமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 50 கோடி கிளப்பில் இணைந்த முதல் நடிகர் கமல் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் நம் உலக நாயகன் இருக்கிறார். இந்தியன் திரைப்படம் உலக அளவில் 68 கோடி அளவில் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அந்த நேரத்தில் பாட்ஷா திரைப்படம் வெளியாகி அதிகமான வசூலை பெற்றிருந்த நிலையில் அந்தப் படத்தையும் தாண்டி இந்தியன் திரைப்படம் மிக அதிக வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top