Cinema News
ஜெயிலரை தாண்டுமா தலைவர் 171?. ஸ்கெட்ச் போடும் லோகேஷ்!. மாஸ் காட்டும் ரஜினி!..
அதிரடி கதைகளை கையில் எடுத்தால் மட்டுமே தனது மார்கெட்டை காப்பாற்றி கொள்ள முடியும் என்பதில் ரஜினி தெளிவாக இருக்கிறார். “ஜெயிலர்” படத்திற்கு முன் சில படங்கள் அவர் எதிர்பாத்த முடிவுகளை தரவில்லை என்பதனால் இப்படி ஒரு நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டாரா ரஜினி?..,
ரஜினி தற்பொழுது ”வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு தற்பொழுதே அவரது ரசிகர்கள் மத்தியில் பற்றிக்கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் கமல், விஜயை வைத்து தொடர்ச்சியான வெற்றிப்படங்களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜுடன் தனது அடுத்த படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார் ரஜினி.
இதையும் படிங்க: ‘இனிமேல்’ நீ அவ்ளோதான் ராசா.. கடுப்பில் வெளியானதுதானா ரஜினி 171 போஸ்டர்? பொட்டிப் பாம்பாக சுருண்ட லோகி
இந்த படம் குறித்த புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. கையில் வாட்ச் கட்டி, தனக்கே உரிய “ஸ்டைலான” தோற்றத்தில் ‘இம்மி’ அளவும் மாறாமல் போஸ் கொடுத்திருப்பார் ரஜினி. என்ன விதமான கதாபாத்திரமாக இது அமையும்? என்கின்ற குழப்பம் இப்பொழுதே துவங்கி அவரது ரசிகர்கள் மத்தியிலே பேசும் பொருளாக மாறி வருகின்றது.
இந்த படத்தில் ரஜினி ‘டான்’ஆக கூட வலம் வரலாம் என்றும், அப்படி வந்தால் அது இன்னும் மாஸாக இருக்கும் என பேச்சும் துவங்கியுள்ளது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து அப்போதைய சாதனைகள் பலவற்றையும் தகர்த்தெறிந்து ரசிகர்களின் உணர்ச்சி குவியலை தூண்டிய படம் பாட்ஷா. அதிலும் இடைவேளையின் போது ‘மாணிக்கம்’, ‘பாட்ஷா’வாக மாறும் நேரத்தில் “நா ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி” அப்படிங்கிற வசனம் அந்த காலத்தில் இளசுகள் முதல் பெருசுகள் வரை பிரபலமானது.
இதற்கு முன் “பில்லா” திரைப்படத்தில் அவர் ‘டான்’ கதாபாதிரத்தை ஏற்று நடிக்க, அது சூப்பர் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் போக்கு தற்பொழுது முற்றிலுமாக மாறிவரும் நிலையில் ரஜினியின் “பேட்ட” படத்தை தவிர வேறு படங்கள் குறிப்பிடும் படியாக அமையவில்லை. ஆனால் “ஜெயிலர்” படமோ பழைய ரஜினிகாந்தை நம் கண்முன் நிறுத்தும் அளவிற்கு அமைந்தது.
இதையும் படிங்க: வடிவேலு பேசிய பஞ்சு! ரஜினி பேசுற அளவுக்கு famous ஆச்சு.. என்ன டையலாக் தெரியுமா?
‘முத்துவேல் பாண்டியன்’ ஆகவே வாழ்ந்திருப்பார் ரஜினி, பின்னனி இசை பலம் சேர்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் தங்களை மறந்து துள்ளிக்குதிக்க வைத்தது. இப்படிப்பட்ட நிலையில் லோகேஷ் படத்தில் ரஜினி எப்படி காட்சியளிப்பார் என்றும் அது ‘ஜெயிலரை’யும் தூக்கி சப்பிட்டுவிடுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் வரதுவங்கியுள்ளது.
எது எப்படி இருந்தாலும் இந்தப்படம் பக்கா கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும். தற்பொழுதய நிலையில் லோகேஷ் கனகராஜால் மட்டுமே தனது மார்கெட்டை காப்பற்ற முடியம் என ரஜினி நம்பியதால் வம்படியாக சென்று தன்னை வைத்து படம் எடுக்குமாறு அணுகியதாக பிரபல சினிமா விமர்சகர் “வலைப்பச்சு” பிஸ்மி கருத்து தெறிவித்துள்ளார்.