ஏ.ஆர்.ரஹ்மானை ஷங்கர் கழட்டிவிட்டதுக்கு காரணம் இதுதானா?!.. என்னப்பா சொல்றீங்க?!..

Published on: March 30, 2024
shankar
---Advertisement---

“ஜென்டில்மேன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் ஷங்கர். அர்ஜூன், மதுபாலா, கவுண்டமனி, செந்தில், சரண்ராஜ், எம்.என்.நம்பியார், வினித் என நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இவர் தனது முதல் பந்திலேயே ‘சிக்ஸர்’ அடித்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் அளவிற்கு பேசும் பொருளாக அமைந்தது.

சமூதாயத்திற்கு தேவையான கருத்துக்களை தனக்கே உரிய பாணியில் தைரியமாக கூறிய இயக்குனர்களில் இவருக்கு என ஒரு தனி இடம் உண்டு. லஞ்சத்திற்கு எதிரான தனது கருத்தை கமல்ஹாசனின் அருமையான நடிப்போடு இந்தியன் படத்தில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டினார்.

இதையும் படிங்க: ஜெயிலரை தாண்டுமா தலைவர் 171?. ஸ்கெட்ச் போடும் லோகேஷ்!. மாஸ் காட்டும் ரஜினி!..

இவர்கள் இருவரின் கூட்டணியில் ‘இந்தியன்2’ வெளிவரும் தருவாயிலும் இருக்கிறது. விக்ரமின் வெறித்தனமான நடிப்பில் வெளிவந்த “அந்நியன்” படம் இவரது வாழ்வின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தனிமனித ஒழுக்கம், கடமை தவறாமை ஆகியவற்றை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப்படம் விக்ரமின் அசுர நடிப்பால் வியப்பை ஏற்படுத்தியது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையோடு திரைக்கு வந்த இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

முதல்வன்’ படத்தை பார்த்திராத நபர்கள் இருந்திருப்பார்களா? என்ற சந்தேகத்தை கிளப்பும் விதத்தை நேர்மையான அரசியலை முன்வைத்து, ஊழலுக்கு எதிரான கதையையும், தங்களது வருங்காலத்தை தீர்மானிக்கும் தலைவர்கள் தேர்வில் வாக்காளர்கள் எப்படி செயல்படவேண்டும் என நாட்டின் நலன் குறித்த தகவல்களை தந்தது இந்த படம்.

அர்ஜூனின் சினிமா கேரியரில் அவரை வானளாவிய புகழுக்கு எடுத்தும் சென்றது “முதல்வன்”. கருப்பு பணத்தின் மீதான வெறுப்பை தெரிவிக்க ரஜினியுடன் கைகோர்த்த ஷங்கர் சிவாஜி படத்தில் இன்றைய யதார்த்த நிலையை தெளிவாக தெரிவித்திருப்பார். இந்த வெற்றிக்கூட்டணி அடுத்தது “எந்திரன்’, 2.ஓ” படங்களிலும் சேர ரசிகர்களின் திருப்தி என்ற கோரபசிக்கு கிடைத்த நளபாகமாகவே அமைந்தது. இவர்கள் எப்பொழுது இணைவார்கள்? மீண்டும் ஒரு விருந்து கிடைக்காதா? என இன்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்து நிற்கின்றார்கள்.

இதையும் படிங்க: யார் இந்த டேனியல் பாலாஜி? முரளிக்கு நடந்த அதே சோகம்தான் இவருக்கும்.. அவரை பற்றிய சில நினைவுகள்

இளைஞர் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டு இவர் கொடுத்த “பாய்ஸ்” படம் இவருக்கு எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று தந்தது. விஜயுடன் இவர் ஜோடி சேர்ந்த “நண்பன்” படம் நகைச்சுவை கலந்த கதையோடு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. எந்த நடிகருடன் இவர் கைகோர்த்தாலும் அது வெற்றிதான் என்று பெயர் அறிவிப்பு வந்த நாளிலேயே அடித்துச்சொல்லும் அளவில் பொழுதுபோக்கையும் கொடுத்து வருபவர் ஷங்கர்.

ஷங்கரின் பெரும்பாலான படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், இந்தியன் 2-வுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஹ்மானை ஷங்கர் ஏன் கழட்டிவிட்டார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அது தயாரிப்பு நிறுவனத்தின் முடிவாக கூட இருக்கலாம். ஆனாலும், எதிர்காலத்தில் ஷங்கருடன் ரஹ்மான் கண்டிப்பாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.