அய்யயோ அதெல்லாம் வேணாம்… அதிர்ச்சியான விஜய்.. இப்படிப்பட்டவரா டேனியல் பாலாஜி?!

Published on: March 30, 2024
---Advertisement---

Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஆனால் அவர் சில பிரபலங்களுக்காக சினிமா துறையில் இறங்கி செய்த சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் டேனியல் பாலாஜி முறையாக நடிப்புக்கு படித்து சினிமாவுக்கு வந்தவர். அப்படி தான் அவருக்கு மருதநாயகம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அந்த படம் நடக்கவே இல்லை. இதையடுத்து அவருக்கு சித்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: இவ்வளவு டைட்டா போட்டா ஹாட் பீட் எகிறுது!.. அரை ஜாக்கெட்டில் அழகை காட்டும் தமன்னா!..

அதில் இருந்து, பாலாஜி என்னும் நடிகர் டேனியல் பாலாஜியாக மாறினார். தொடர்ந்து சீரியல் வாய்பே கிடைத்து கொண்டு இருக்கிறது. இங்கையே இருந்தால் சீரியலே வாழ்க்கையாகி விடும் என்பதால் கோலிவுட் பக்கம் திரும்புகிறார். சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து அவருக்கு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தார்.

வில்லன் அமுதனை யாராலும் மறக்கவே முடியாது. அந்த படத்தில் நடிக்கும் போது அமெரிக்காவில் ஷூட்டிங் நடந்ததாம். பிணத்துக்கு மேக்கப் போட அங்குள்ள நிறுவனங்கள் 50 ஆயிரம் டாலர் வரை வேண்டும் எனக் கேட்டார்களாம். ஆனால் டேனியல் பாலாஜி எனக்கு 100 டாலர் தாங்க எனக் கேட்டாராம். கௌதம் மேனனுக்கு என்னவென்று புரியாமல் அவர் கேட்டதுக்காக கொடுத்தாராம்.

இதையும் படிங்க: என் படத்தில் விஜய் நடிக்க மறுத்தும் அவர் கூட நடிக்க காரணம்! கௌதம் மேனன் கூறிய சூப்பர் தகவல்

நேராக போய் மேக்கப் பொருட்களை வாங்கி கொண்டு வந்து பிணங்களுக்கு தனி ஆளாக போட்டு முடித்தாராம். இதுபோல பைரவா படத்தில் கோட்டை வீரன் கேரக்டரில் நடிக்க டேனியல் பாலாஜிக்கு வாய்ப்பு வந்து இருக்கிறது. டைரக்டர் பரதன் அவரை மொட்டை அடிக்க வேண்டும் என்றாராம்.

ஆனால் விஜய் அவர் எவ்வளோ பெரிய நடிகர். அவரிடம் போய் அப்படி கேட்கிறீர்களே? அதெல்லாம் வேண்டாம் என்றாராம். ஆனால் அடுத்த நாளே மொட்டையுடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்தாராம். இது தான் எனக்கு முக்கியம். மற்ற படங்களின் ஷூட்டிங்கை பின்னால் பார்த்துக்கிறேன் எனக் கூறினாராம்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.