Connect with us
S.Janaki

Cinema History

ஆபரேஷன் முடித்தும் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் பாடி சாதனை படைத்த எஸ்.ஜானகி!..

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு ஒரு முறை மூச்சுத்திணறல் வந்தது. அப்போது அவர் அமெரிக்காவில் செய்த சிகிச்சையும், தொடர்ந்து இந்தியாவில் வந்து கச்சேரியில் பாடி சாதனை செய்ததையும் பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கச்சேரிக்காகப் போனார் ஜானகி. மறுநாள் கச்சேரி. முதல் நாள் இரவு மூச்சுத்திணறல். இருதயத்துக்குப் போகிற ரத்தக்குழாயில் கட்டி இருந்ததாம். அப்போது 9 நாள்கள் ஐசியுல இருந்தாங்களாம். அப்போது அவர் இறந்து விட்டதாக எல்லாம் வதந்தி கிளம்பியது. அப்போது எஸ்.பி.பி. தான் விளக்கம் சொன்னாராம்.

இதையும் படிங்க… பொய் சொல்லி வாய்ப்பு கேட்டு கெஞ்சிய சந்திரபாபு!.. எம்.ஜி.ஆரையே அசரவைத்த காமெடி நடிகர்…

அதன்பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்தியாவுக்கு சிகிச்சை முடிந்து திரும்பியதும் மறுநாள் கச்சேரி. இந்தக் கச்சேரிக்கு வந்தால் மட்டும் போதும்னு சொன்னாங்க. உடனே சரின்னு மேடைக்கு வந்துவிட்டாங்க. ஒரே ஒரு கடவுள் வாழ்த்து மட்டும் பாட முடியுமான்னு கேட்டாங்க. இந்த அம்மாவும் தைரியமாக கடவுள் வாழ்த்தைப் பாடி முடிச்சாங்களாம்.

அந்த கடவுள் வாழ்த்தை முழுமையாகப் பாட முடியுமான்னு எனக்குத் தெரியல. ஆனா அதுக்கு அப்புறம் 9 பாடல்களை பாடி முடித்தேன். இது இறைவனோட சக்தி. அந்த பாபாவோட சக்தி என்றாராம் எஸ்.ஜானகி. அப்படி ஒரு வில் பவர் அவரிடம் இருந்ததால் தான் அப்படிப்பட்ட சாதனையை அந்த அம்மா செய்திருக்க முடியும்.

எஸ்.ஜானகியை வீடு தேடிப் போய் பாராட்டியவர்கள் 3 பேர் தான். முதல் ஜோடி பார்த்திபன், சீதா. புதிய பாதைக்காக வீடு தேடிப் போய் பாராட்டினாராம். அடுத்ததாக மலரே மௌனமா பாடலைப் பாடியதற்காக அர்ஜூன் போய் பாராட்டினராம்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… டேனியல் பாலாஜியின் மரணம்.. கோயிலில் நடந்த அதிசயம்! கதிகலங்கி நிற்கும் ஆவடி மக்கள்

எஸ்.ஜானகி பாடிய எத்தனையோ பாடல்கள் சூப்பராக இருந்தாலும் அவர் பக்திமயமாகப் பாடிய மாதா உன் கோவிலில் பாடல் இப்போது கேட்டாலும் நெஞ்சைக் குளிரச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்தப் பாடல் ஒலிப்பதைக் கேட்கலாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top