
Cinema News
நீதான் சினிமாவ காப்பாத்த போறீயா?!.. கலாய்த்த கவுண்டமணி!.. சாதித்து காட்டிய பாக்கியராஜ்!..
Published on
By
கவுண்டமணி என்றாலே நக்கல்தான்… எதிரே இருப்பவர் என்ன சொன்னாலும் அதற்கு நக்கலாக ஒரு கவுண்ட்டர் கொடுப்பார். அதனால்தான் அவர் நக்கல் நாயகன். அதையேதான் தான் நடிக்கும் காமெடி காட்சிகளிலும் செய்தார். அதுவே ரசிகர்களுக்கும் பிடித்துபோக கடைசிவரை தான் நடிக்கும் படங்களில் அதையே பின்பற்றினார் கவுண்டமணி.
சினிமாவுக்கு வருவதற்கு முன் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் அவர் வெறும் காமெடியன் மட்டுமே. ஆனால், நாடகங்களில் வில்லனாக அசத்தி இருக்கிறாராம். இதை நடிகர் செந்திலே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். நாடகங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை.
இதையும் படிங்க: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்!.. கொஞ்சம் அசந்தா இமேஜை காலி பண்ணிடுவாரு!..
ஆனால், ஒரு காட்சியில் வரும் சின்ன சின்ன வேஷங்களே கிடைத்தது. அப்போதுதான் பாக்கியராஜுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கவுண்டமணி, பாக்கியராஜ் மற்றும் கல்லாப்பெட்டி சிங்காரம் மூவரும் ஒரு அறையில் தங்கி வாய்ப்பு தேடி வந்தனர். அப்போதெல்லாம் இரவு நேரங்களில் பாக்கியராஜ் கதை எழுதி கொண்டிருப்பாரம்.
இதனால் விளக்கு எரிந்து கொண்டே இருக்க கடுப்பாகும் கவுண்டமணி ‘அட லைட்ட ஆஃப் பண்ணிட்டு படுப்பா. நீதான் சினிமாவ காப்பாத்த போறியா?’ என கேட்பாராம். அப்போது அங்கு இருக்கும் சிங்காரம் ‘ஏம்பா அப்படி சொல்ற. அவன் கண்டிப்பா சாதிப்பான்’ என பாக்கியராஜுக்கு ஆதரவாக பேசுவாராம்.
இதையும் படிங்க: யார் சொல்லியும் கழுத்து செயினை கழட்டாத கவுண்டமணி!.. அதில் இருக்கும் ரகசியம் என்ன?..
ஆனால், அதே பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தபின் பதினாறு வயதினிலே படத்தில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதேபோல், அடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு நல்ல வேடத்தை கவுண்டமணிக்கு வாங்கி கொடுத்ததும் பாக்கியராஜ்தான்.
அதன்பின் தனியாக படங்களை இயக்க துவங்கி திரைக்கதை மன்னன் என ரசிகர்கள் பாராட்டும் இடத்தை பிடித்தார் பாக்கியராஜ். ஆனால், அவரின் படங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தையே அதிகம் பயன்படுத்தினார். ஞானப்பழம் படத்தில் மட்டும் கவுண்டமணியை நடிக்க வைத்திருப்பார் பாக்கியராஜ்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...