கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்!.. கொஞ்சம் அசந்தா இமேஜை காலி பண்ணிடுவாரு!..

நாடகங்களில் பல வருடங்கள் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் கவுண்டமணி. இவரின் சொந்த பெயர் சுப்பிரமணி. நாடகங்களில் எதிரே இருப்பவர் என்ன வசனம் பேசினாலும் அதற்கு எதாவது ஒரு கவுண்ட்டரை கொடுத்துவிடுவார் மணி. அதனால், அவரின் பெயர் கவுண்டர் மணியாக மாறியது.

பதினாறு வயதினிலே படத்தில் டைட்டில் கார்டில் தவறுதலாக கவுண்டமணி என பெயரை போட அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது. 80,90களில் தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர். செந்திலோடு இணைந்து இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இதையும் படிங்க: 17 முறை ரஜினியுடன் மோதிய சரத்குமார் படங்கள்… அதிக படங்களில் ஜெயித்தது யாருன்னு தெரியுமா?

ஒருகட்டத்தில் திரைப்படங்களில் இரண்டாவது ஹீரோ போலவே வலம் வந்தார். சத்தியராஜ், பிரபு, கார்த்தி, சரத்குமார் என பல நடிகர்களுடைய படங்களின் வெற்றிக்கு கவுண்டமணி தேவைப்பட்டார். இவரோடு நடிக்கும்போது நடிகர்கள் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் அவர்களையே கலாய்த்துவிடுவார். சத்தியராஜுக்கு அவரை பற்றி தெரியும். அதோடு, கவுண்டமணிக்கு அவர் நெருக்கமான நண்பர் என்பதால் அவர் கண்டு கொள்ள மட்டார்.

ஆனால், ரஜினி, கமல் போன்றவர்கள் கவுண்டமணியை தங்களுடன் நடிக்க வைக்க யோசித்தனர். ஏனெனில் சமயம் கிடைத்தால் அவர்களையே கலாய்த்துவிடுவார். பல படங்களில் அப்படி செய்திருக்கிறார். எனவே, கவுண்டமணி வேண்டாம்.. ஜனகராஜை போடுங்கள். இல்லையெனில் செந்திலை போடுங்கள்’ என சொல்லி விடுவார்களாம்.

இதையும் படிங்க: தேவர் மகனை இயக்கியது கமல்ஹாசனா? பரதனா?.. நாசர் சொல்ல வருவது என்ன?..

சிங்கராவேலன் படத்தில் கூட கவுண்டமணியுடன் கமல் நடித்ததற்கு காரணம் இயக்குனர் அடம்பிடித்ததால்தான். அதேபோல், மன்னன் படத்தில் கூட கவுண்டமணியுடன் ரஜினி நடிக்க சம்மதித்தது பி.வாசுவுக்காகத்தான். மேலும், எஜமான் படத்தில் நடிக்கும்போது கூட ‘உங்களை அவர் நக்கலடிப்பது மாதிரி காட்சிகள் இருக்காது. அவர் மீறி பேசினால் எடிட்டிங்கில் வெட்டி விடலாம்’ என அப்படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சொன்ன பிறகே ரஜினி ஒப்புக்கொண்டார்.

ஆனால், எடிட்டிங்கில் வெட்டி விடாத மாதிரி வசனம் பேசி விடுவார் கவுண்டமணி. இதனால் அது அப்படியே திரையில் வந்துவிடும். கமலும், ரஜினியும் முடிந்த வரை கவுண்டமணியுடன் நடிப்பதை தவிர்த்தே வந்தனர்.

 

Related Articles

Next Story