Connect with us
Devar magan

Cinema History

தேவர் மகனை இயக்கியது கமல்ஹாசனா? பரதனா?.. நாசர் சொல்ல வருவது என்ன?..

1992ல் வெளியான சூப்பர்ஹிட் படம் தேவர் மகன். கமல் திரைக்கதை எழுதி நடித்துள்ளார். பரதன் இயக்கியுள்ளார். கமல், சிவாஜி இணைந்து நடித்ததால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தில் நாசர், ரேவதி, கௌதமி, காகா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அற்புதமாக இருந்தன.

இதையும் படிங்க… 26 முறை கமலுடன் மோதிய பாக்கியராஜ் படங்கள்… ஜெயிச்சது யாரு உலகநாயகனா? உள்ளூர் நாயகனா?

இந்தப் படத்தைப் பற்றி நீண்ட நாள்களாக ஒரு சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. தேவர் மகனை இயக்கும் போது கமல் தான் எல்லாவற்றையும் முடிவு செய்துள்ளார். பரதன் டைரக்டர்னு ஒரு பேருக்காகத் தான் போட்டு இருக்கிறார்கள் என்றனர். இதுபற்றி படத்தில் மாயன் கேரக்டரில் அசுரத்தனமாக நடித்த நாசர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தேவர் மகன் முழுக்க முழுக்க வட்டாரத்தைச் சேர்ந்த கதை. அதனால் அதைச் சாராத வேறு மொழி பேசும் ஒருத்தர் இயக்கி இருக்கிறார் என்பதால் சந்தேகம் வரத்தான் செய்யும். ஏற்கனவே பரதன் மலையாளத்தில் மிகச்சிறந்த இயக்குனர். ஒவ்வொரு ஷாட்டும் டிசைடு பண்ணியது அவர் தான். சில கருத்து வேறுபாடுகள் சில முரண்பாடுகள் எல்லாம் நடந்திருக்கும். என்ன சொல்லப்பட வேண்டுமோ அதைத் தான் சொல்லியிருக்கிறார்.

Kamal, Nassar

Kamal, Nassar

டைரக்டர் சொன்ன ஐடியாவை யாரும் மறுக்கவில்லை. மியூசிக் தெரியும். ஆர்ட் டைரக்டர். பெயிண்டிங்கும் பண்ணுவார். நான் என்ன பண்ணனுமோ அதை அப்படியே பதிவு பண்ணனும் அவ்வளவு தானேன்னு பரதன் சொன்னார்.

திரைக்கதை எழுதியது கமல் சார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றி எழுதினார். ஒரு வார்த்தைக்கு கூட வேறு யாரும் ஹெல்ப் பண்ணவே இல்லை. முதல் நாள் சூட்டிங் எனக்கு. கமல் சார் எங்கிட்ட இதைத் தான் சொன்னார். நீங்க வில்லனா பண்ணிடாதீங்க. மாயன் பண்றது எல்லாமே சரி தான். அதுக்கான நியாயங்கள் இருக்கு.

இதையும் படிங்க… சும்மா இருந்தவங்கள உசுப்பேத்தி ரசிக்கும் விஜய்! உண்மையிலேயே இப்படிப்பட்டவரா? பாடிகார்ட் சொன்ன உண்மை!..

அந்த ஒரு வார்த்தையைக் கேட்டுத் தான் படம் முழுவதும் நான் பண்ணினேன். அதனால் தான் அந்த கேரக்டர்ல அவ்வளவு கம்பீரம் இருந்தது. நான் நினைச்ச மாதிரி பண்ணிருந்தா சாதாரண சினிமா வில்லன் மாதிரி தான் இருந்துருக்கும். ஒரு எழுத்தாளர் வந்து அந்த கதாபாத்திரத்தை நடிகன்கிட்ட கடத்துறது வந்து ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top