Connect with us
Packyaraj, Kamal

Cinema History

26 முறை கமலுடன் மோதிய பாக்கியராஜ் படங்கள்… ஜெயிச்சது யாரு உலகநாயகனா? உள்ளூர் நாயகனா?

1980 முதல் தற்போது வரை கமல் முக்கியமான முன்னணி நடிகர் என்பது நமக்குத் தெரியும். அதே போல் பாக்கியராஜ் 80 மற்றும் 90களில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்தவர். இருவரது படங்களும் எத்தனை தடவை மோதின என்று பார்ப்போம்.

1979ல் கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படமும், பாக்கியராஜ் நடித்த புதிய வார்ப்புகள் படமும் ரிலீஸ். இவற்றில் 2 படங்களுமே வெற்றி. அதே சமயத்தில் வெளியான கமல் நடித்த தாயில்லாமல் நான் இல்லை படமும் வெற்றி. அதே ஆண்டில் கமல் நடித்த மங்கள வாத்தியம் படமும், பாக்கியராஜின் கன்னிப்பருவத்திலே படமும் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.

இதையும் படிங்க… 28 முறை ரஜினியுடன் மோதிய சத்யராஜ் படங்கள்!. ஜெயிச்சது யாருன்னு வாங்க பார்ப்போம்!..

1980ல் கமல் நடித்த குரு, பாக்கியராஜ் நடித்த ஒரு கை ஓசை படங்கள் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். 1981ல் கமல் நடித்த மீண்டும் கோகிலா, பாக்கியராஜின் மௌன கீதங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். அதே ஆண்டில் கமல் நடித்த ராஜபார்வை படமும், பாக்கியராஜ் நடித்த இன்று போய் நாளை வா படமும் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.

அதே ஆண்டில் கமல் நடித்த கடல் மீன்கள் படமும், பாக்கியராஜ் நடித்த விடியும் வரை காத்திரு படமும் ரிலீஸ். இவற்றில் 2 படங்களும் வெற்றி. அதே ஆண்டில் கமல் நடித்த டிக் டிக் டிக் படமும், பாக்கியராஜ் நடித்த அந்த 7 நாட்கள் படமும் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1982ல் கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல், பாக்கியராஜ் நடித்த தூறல் நின்னு போச்சு படங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் படம் 300 நாள்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. அதனால பாக்கியராஜ் தான் வின்னர்.

Sakalakala Vallavan, Poi satchi

Sakalakala Vallavan, Poi satchi

அதே ஆண்டில் கமல் நடித்த சகலகலா வல்லவன், பாக்கியராஜ் நடித்த பொய்சாட்சி படங்கள் ரிலீஸ் ஆனது. இதுல கமல் தான் வின்னர். அதே ஆண்டில் கமலின் பகடை பன்னிரண்டு, பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.

1983ல் கமல் நடிப்பில் சத்மா, பாக்கியராஜ் நடிப்பில் முந்தானை முடிச்சு படங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். கமலின் மூன்றாம் பிறை இந்தி ரீமேக் தான் சத்மா. படம் படு பிளாப். 1985ல் கமல் ஜப்பானில் கல்யாண ராமன், பாக்கியராஜின் சின்ன வீடு படங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.

1987ல் பாக்கியராஜின் எங்க சின்ன ராசா, கமலின் பேர் சொல்லும் பிள்ளை படங்கள் ரிலீஸ். பாக்கியராஜ் தான் வின்னர். 1988ல் கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி, பாக்கியராஜ் நடித்த இது நம்ம ஆளு படங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1989ல் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், பாக்கியராஜ் நடித்த என் ரத்தத்தின் ரத்தமே ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர்.

அதே ஆண்டில் கமல் நடித்த வெற்றி விழா, பாக்கியராஜ் நடித்த ஆராரோ ஆரிரரோ படங்கள் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர். 1990ல் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன், பாக்கியராஜ் நடித்த அவசர போலீஸ் 100 படங்கள் ரிலீஸ். இதுல 2 படங்களும் வெற்றி. 1991ல் கமல் நடித்த குணா, பாக்கியராஜ் நடித்த ருத்ரா படங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.

1992ல் கமல் நடித்த தேவர் மகன், பாக்கியராஜ் நடித்த ராசுக்குட்டி படங்கள் ரிலீஸ். தேவர் மகன் 200 நாள்கள் ஓடியது. கமல்தான் வின்னர். 1994ல் கமல் நடித்த மகாநதி, பாக்கியராஜ் நடித்த வீட்ல விசேஷங்க படங்கள் ரிலீஸ். இதுல கமல் தான் வெற்றி. 1995ல் கமல் நடித்த சதி லீலாவதி, பாக்கியராஜ் நடித்த ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டும் வெற்றி. 1996ல் கமல் நடித்த அவ்வை சண்முகி, பாக்கியராஜின் ஞானப்பழம் படங்கள் ரிலீஸ். இதுல கமல் தான் வின்னர்.

Thavanikanavugal, Enakkul Oruvan

Thavanikanavugal, Enakkul Oruvan

1998ல் கமல் நடித்த காதலா காதலா, பாக்கியராஜ் நடித்த வேட்டிய மடிச்சுக்கட்டு படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டும் வெற்றி. 1984ல் கமல் நடித்த எனக்குள் ஒருவன், பாக்கியராஜ் நடித்த தாவணிக்கனவுகள் படங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர்.

1979ல் பாக்கியராஜ் நடித்த சுவரில்லாத சித்திரங்கள், கமல் நடித்த அழியாத கோலங்கள் படங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1980ல் கமல் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு, பாக்கியராஜ் நடித்த குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படங்கள் ரிலீஸ். இதுல கமல் படம் தான் வெற்றி.

google news
Continue Reading

More in Cinema History

To Top