28 முறை ரஜினியுடன் மோதிய சத்யராஜ் படங்கள்!. ஜெயிச்சது யாருன்னு வாங்க பார்ப்போம்!..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதனால் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் 80 மற்றும் 90களில் சத்யராஜ் மிகப்பெரிய முன்னணி நடிகராக இருந்தார். அந்த வகையில் ரஜினியுடன் சத்யராஜின் படங்கள் 28 முறை மோதியுள்ளன. இவற்றில் ஜெயிச்சது யாருன்னு பார்ப்போம்.

1986ல் ரஜினிக்கு நான் அடிமை இல்லை படமும், சத்யராஜிக்கு ரசிகன் ஒரு ரசிகை படமும் ரிலீஸ். இந்த மோதலில் சத்யராஜ் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு விடுதலையும், சத்யராஜிக்கு கடைக்கண் பார்வை படமும் ரிலீஸ். இந்த மோதலில் சதயராஜ்; தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு மாவீரன் படமும், சத் பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் என்ற 2 படங்களும் ரிலீஸ். இதுல பாலைவன ரோஜாக்கள் மிகப்பெரிய ஹிட். அதனால் சத்யராஜ் தான் வின்னர்.

இதையும் படிங்க... கடைசி வரை நடக்காமல் போன டேனியல் பாலாஜியின் நீண்டகால ஆசை… நடந்து இருந்தா நல்லா இருக்குமே!

1987ல் ரஜினிக்கு வேலைக்காரன், சத்யராஜிக்கு சின்னத்தம்பி பெரிய தம்பி, முத்துக்கள் மூன்று ஆகிய படங்கள் மோதின. இவற்றில் முத்துக்கள் மூன்று பிளாப். வேலைக்காரன், சின்ன தம்பி பெரிய தம்பி வெற்றி பெற்றன. அதே ஆண்டில் ரஜினிக்கு ஊர்க்காவலன், சத்யராஜிக்கு ஜல்லிக்கட்டு படங்கள் மோதின. இந்த மோதலில் சத்யராஜ் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு மனிதன், சத்யராஜிக்கு வேதம்புதிது படங்கள் ரிலீஸ். இவற்றில் 2 படங்களும் வெற்றி.

1988ல் ரஜினிக்கு குரு சிஷ்யன், சத்யராஜிக்கு என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படங்கள் வந்தன. இவற்றில் 2ம் வெற்றி. அதே ஆண்டில் ரஜினிக்கு கொடி பறக்குது, சத்யராஜிக்கு புதியவானம் ரிலீஸ். இவற்றில் சத்யராஜ் தான் வின்னர்.

Thai nadu, Rajathi raja

Thai nadu, Rajathi raja

1989ல் ரஜினிக்கு ராஜாதிராஜா, சத்யராஜிக்கு தாய் நாடு படங்கள் ரிலீஸ். இந்த மோதலில் 2ம் வெற்றி. அதே ஆண்டில் ரஜினிக்கு சிவா, சத்யராஜிக்கு பிக்பாக்கெட் படங்கள் ரிலீஸ். இந்த மோதலில் 2ம் சரியாக ஓடல. அதே ஆண்டு ரஜினிக்கு ராஜா சின்ன ரோஜா, சத்யராஜிக்கு சின்னப்ப தாஸ் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு மாப்பிள்ளை, சத்யராஜிக்கு வாத்தியார் வீட்டுப் பிள்ளை மற்றும் திராவிடன் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

1991ல் ரஜினிக்கு தளபதி, சத்யராஜிக்கு பிரம்மா படங்கள் ரிலீஸ். இதுல 2ம் வெற்றி. 1992ல் ரஜினிக்கு மன்னன், சத்யராஜிக்கு ரிக்ஷா மாமா படங்கள் ரிலீஸ். இதுல 2ம் வெற்றி. அதே ஆண்டில் ரஜினிக்கு பாண்டியன், சத்யராஜிக்கு திருமதி பழனிச்சாமி படங்கள் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 1993ல் ரஜினிக்கு எஜமான், சத்யராஜிக்கு வால்டர் வெற்றிவேல் படங்கள் ரிலீஸ். இதுல 2 படங்களும் வெள்ளி விழா. ஆனால் சத்யராஜ் படம் தான் 200 நாள் ஓடியது. அதனால் சத்யராஜ் தான் வின்னர்.

1990ல் ரஜினிக்கு பணக்காரன், சத்யராஜிக்கு வாழ்க்கைச் சக்கரம் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு அதிசய பிறவி, சத்யராஜிக்கு மதுரை வீரன் எங்க குலசாமி படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

இதையும் படிங்க... யார் சொல்லியும் கழுத்து செயினை கழட்டாத கவுண்டமணி!.. அதில் இருக்கும் ரகசியம் என்ன?..

1992ல் ரஜினிக்கு அண்ணாமலை, சத்யராஜிக்கு மகுடம் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1993ல் ரஜினிக்கு உழைப்பாளி, சத்யராஜிக்கு கட்டளை படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். அதே ஆண்டில் ரஜி வள்ளி, சத்யராஜிக்கு உடன்பிறப்பு படங்கள் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 1994ல் ரஜினிக்கு வீரா, சத்யராஜிக்கு வண்டிச்சோலை சின்ராசு படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1995ல் ரஜினிக்கு பாட்ஷா, சத்யராஜிக்கு எங்கிருந்தோ வந்தான் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

1997ல் ரஜினிக்கு அருணாச்சலம், சத்யராஜிக்கு வள்ளல் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1985ல் ரஜி படிக்காதவன், சத்யராஜிக்கு சாவி படம் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 2002ல் ரஜினிக்கு பாபா, சத்யராஜிக்கு மாறன் படங்கள் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 2005ல் ரஜினிக்கு சந்திரமுகி, சத்யராஜிக்கு 6.2 படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 2007ல் ரஜினிக்கு சிவாஜி, சத்யராஜிக்கு பெரியார் படங்கள் ரிலீஸ். இதுல 2ம் ஹிட். இனியும் யார் தான் அதிகம் ஜெயிச்சது என்று சொல்லத்தான் வேண்டுமா?

 

Related Articles

Next Story