Connect with us
simbbu

Cinema News

சிம்புவால் தக் லைப் படத்திலிருந்து வெளியேறிய ஹீரோ!. அட அந்த ஹேண்ட்சம் ஹீரோ வராறாம்!..

Thug Life: கமல் மணிரத்தினம் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராக காத்துக் கொண்டிருக்கிறது தக் லைஃப் திரைப்படம். 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் சேர்ந்து பணியாற்றும் திரைப்படமாக இந்த தக் லைஃப் திரைப்படம் அமையும். ஆரம்பத்தில் இந்த படத்தில் பெரிய பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது பெரிய மாற்றமே நடந்திருக்கிறது.

துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் எல்லாம் நடிக்க இருந்தார்கள். ஆனால் இப்போது இவர்கள் யாரும் தக் லைஃப் படத்தில் நடிக்கவில்லை. இடையில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் கமல் தேர்தல் பிரச்சாரம் போன்ற வேலைகளில் பிஸியாக இருப்பதால் துல்கர் சல்மானால் கால்ஷீட்டை தள்ளிப் போட முடியாத சூழ்நிலை. அதனால் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகினார்.

இதையும் படிங்க: ஆடிசன்னு கூப்பிட்டு லாக் பண்ணிட்டாங்க! ‘அசுரன்’ பட நடிகைக்கு நடந்த கொடுமை.. இவ்ளோ வேதனையா

அவருக்கு பதில் சிம்பு உள்ளே நுழைந்தார். சிம்பு இணைந்த பிறகு ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகினார். அதற்கான காரணமும் ஜெயம் ரவியின் கால்ஷீட் பிரச்சினைதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மையிலேயே சிம்புவுக்கும் ஜெயம் ரவிக்கும் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாகவும் சிம்பு வந்த பிறகு அவருடன் நடிக்க மாட்டேன் என ஜெயம் ரவி விலகியதாகவும் வலைப்பேச்சு டீம் அவர்கள் சேனலில் கூறியிருக்கிறார்கள்.

அதனால் ஜெயம் ரவி கேரக்டரில் புதியதாக ஒரு நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மணிரத்தினம் இருக்கிறார். இப்போது அந்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மணிரத்தினத்திற்கும் அரவிந்த்சாமிக்கும் இடையே நல்ல ஒரு பாண்டிங் இருந்து வருகிறது.

இதையும் படிங்க: அம்மா பாடிய பாடலை மெட்டாக்கிய இளையராஜா!.. அட அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!…

அதனால் கண்டிப்பாக அரவிந்த்சாமி நடிப்பார் என்று கூறிவருகிறார்கள். ஆனால் இன்னொரு நடிகரின் பெயரும் அடிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அவர் வேறுயாருமில்லை. நடிகர் அருண்விஜய். ஆனால் அருண்விஜயை பொறுத்தவரைக்கும் இப்போது வணங்கான் திரைப்படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக வேறொரு படத்திலும் கமிட் ஆகியிருப்பதால் அவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top