Home News Reviews Throwback Television Gallery Gossips

பாய்ஸ் படத்தில் ஜெனிலியா கேரக்டர் நான் தான் செஞ்சிருக்கணும்… ஆனா.. ரகசியம் சொன்ன வாரிசு நடிகை…

Published on: April 1, 2024
---Advertisement---

Boys: ஷங்கர் இயக்கத்தில் மாஸ் ஹிட் பாய்ஸ் திரைப்படம். இப்படத்தில் நாயகியாக ஜெனிலியா. சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் ஆகியோர் ஹீரோவாக நடித்திருந்தனர். ஆனால் முதலில் இப்படத்தில் ஜெனிலியாவுக்கு பதில் வேறு ஒரு வாரிசு நடிகையை தான் ஷங்கர் ஓகே செய்தாராம்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் பாய்ஸ். இப்படத்தின் நடிகை, நடிகையர் தேர்வே வித்தியாசமாக அமைந்ததாம். மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வேலை செய்து வந்தார் சித்தார்த். அவரை ஆடிஷனில் கலந்துக்கொள்ள சொல்லி எழுத்தாளர் சுஜாதா தான் சொல்லினாராம்.

இதையும் படிங்க: அம்மா பாடிய பாடலை மெட்டாக்கிய இளையராஜா!.. அட அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!…

அதன்பின்னரே, அவர் ஆடிஷனில் தேர்வாகி முன்னா கதாபாத்திரத்துக்கு முடிவானார். ஒரு டான்ஸ் போட்டியில் கலந்துக்கொண்டு பங்கேற்று வந்த பரத்தை ஒரு ஹீரோவாக மாற்றினார். முதலில் பரத் தான் முன்னா ரோலுக்கு தேர்வாகி இருந்தார்.

இதையடுத்து, தமனை மியூசிக் ஷோவில் பார்த்து ஓகே செய்கிறார். தேவயானியின் தம்பியான மயூர் என்பவருக்கு தான் முதலில் ஆடிஷன் நடந்ததாம். ஆனால் அந்த புகைப்படத்தில் இருந்த நகுல் தான் ஷங்கருக்கு ஓகே ஆகி இருக்கிறார். விஷுவல் கம்யூனிகேஷன் மாணவரான மணிகண்டனை ஒரு ஹீரோவாக ஓகே செய்தனர்.

இதையும் படிங்க: ஆடிசன்னு கூப்பிட்டு லாக் பண்ணிட்டாங்க! ‘அசுரன்’ பட நடிகைக்கு நடந்த கொடுமை.. இவ்ளோ வேதனையா

அடுத்து, ஹீரோயின் ரோலுக்கு தேடுதல் வேட்டை நடந்ததாம். அதில் முதலில் வரலட்சுமி சரத்குமாரை தான் ஷங்கர் கேட்டு இருக்கிறார். ஆடிஷனில் எல்லாம் ஓகே செய்யப்பட்டு விட சரத்குமாருக்கு வரலட்சுமி நடிப்பதில் அப்போது விருப்பம் இல்லையாம். இதனால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.

பாய்ஸ் மட்டுமில்லாமல் காதல், வெங்கட் பிரபு இயக்கத்தில் சரோஜா படத்திலும் வரலட்சுமிக்கு நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். இப்படங்களை மிஸ் செய்ய ஒரே காரணம் அப்பா விடலை என்பது தான் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். விரைவில் நடிகை வரலட்சுமி திருமணமாகி செட்டில் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.