Cinema News
3 நாள் தொடர் விரதம்… ஷூட்டிங்கிற்கு முன்னர் சரக்கு… துணியில்லாமல் அந்த காட்சியில் பிரித்விராஜ் நடித்தது இப்படித்தான்!
Prithviraj: மலையாள சினிமா இந்த வருடம் தொடர் வெற்றிகளால் குதூகலத்தில் இருக்கிறது என தான் சொல்ல வேண்டும். அந்த லிஸ்டில் அடுத்த இணைப்பாக பிரித்விராஜின் ஆடுஜீவிதம் இணைந்திருக்கிறது. அப்படத்தின் ஒரு காட்சிக்காக பிரித்விராஜ் தன்னை வருத்தி நடித்துக் கொண்ட தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த வருடம் தொடங்கியதிலிருந்து மலையாள சினிமா தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறது. மலையாள ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் கொண்டாடும் விதமாக திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. பிரம்ம யுகம், பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் என தமிழ் ரசிகர்களும் இப்படங்களுக்கு லைக்ஸ் குவித்தனர்.
இதையும் படிங்க: சந்தானம் கல்யாணத்துக்கு போகாத சிம்பு!.. ஆனா அதுக்கு பதிலா அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..
அந்த வகையில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஆடு ஜீவிதம். உடலை குறைத்து தன்னை வருத்திக்கொண்டு நடித்து இருக்கிறார் பிரித்விராஜ். இப்படத்தினை மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கி இருக்கிறார். பென்யாமின் என்ற மலையாள எழுத்தாளர் எழுதிய அடுச்சிவிதம் நாவலை தழுவி எடுக்கப்பட்டது இப்படம்.
14 வருடமாக படப்பிடிப்பிலிருந்த இப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பார்ப்போரை கவர்ந்திழுக்கும் கதை ஆடு ஜீவிதம் ரசிகர்களை அசைத்து பார்த்துவிட்டது. வசூல் கிட்டத்தட்ட 100 கோடியை நெருங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், தப்பிக்க நினைக்கும் பிரித்விராஜ் குளிக்க போகும் ஒரு காட்சியை படமாக்கிய விதத்தினை ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ் தெரிவித்து இருக்கிறார். கேரளா போன்ற பசுமையான இடத்தில் இருந்த பிரித்விராஜ் தண்ணிக்கே தவிக்கும் நிலை உருவாகும்.
இதையும் படிங்க: முதல் சந்திப்பில் ராமராஜன் கேட்ட கேள்வி!. ஆடிப்போன திண்டுக்கல் லியோனி!.. நடந்தது இதுதான்!..
இதனால் குளிக்க முடியாமல் அவர் பட்ட கஷ்டத்தால் அவர் உடல் எப்படி குறைந்து இருக்கும் என்ற காட்சியில் நிர்வாணமாக நடித்து இருப்பார். அந்த காட்சிக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். எல்லா ஷாட்டுக்கும் நேரம் எழுதி வைத்து இருப்போம். அந்த காட்சி எடுக்கும் போது மாலை 3.30. ஏற்கனவே நிறைய உடல் எடையை குறைத்த பிரித்விராஜ் சாப்பிடாமல் இருந்ததால் டயர்ட்டாகி இருந்தார்.
அவருக்கு ஷூட்டிங் போது 30 எம்.எல் வோட்கா கொடுத்தோம். அது உடலில் இருக்கும் மீதி தண்ணி சத்தையும் எடுத்து விடும். லோகேஷனுக்கு அவரை ஷேரில் தூக்கி சென்றோம். காட்சிக்கு ரெடியாகும் போது அவரை நாங்கள் தூக்கி சென்று தான் நிறுத்தினோம். எல்லாருமே ப்ளான் செய்து எடுத்து முடித்தோம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.