விஜயகாந்தை வைத்து பல ஹிட்களை கொடுத்த சுந்தராஜன்! இவங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா?

Published on: April 2, 2024
viji
---Advertisement---

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மனதில் ஒரு தலைவராக வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி வந்தார்கள்.

எம்ஜிஆருக்கு அடுத்த படியாக பெருங்கூட்டத்தை பார்க்க முடிந்தது என்றால் அது விஜயகாந்தின் மறைவிற்குத்தான். இப்படி சினிமாவிலும் நிஜ வாழ்விலும் பல நல்ல செயல்களை செய்து விட்டு சென்றிருக்கிறார். விஜயகாந்தை பொருத்தவரைக்கும் அவரை நெருங்குபவர்களுக்கு கம்ஃபர்ட்டான ஒரு சூழ்நிலையைத்தான் எப்போதுமே கொடுப்பார்.

இதையும் படிங்க: விஜய் விஷயத்துல ஏமாந்து போயிட்டேன்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சுந்தர் சி…

ஒரு மாஸ் நடிகர், பெரிய நடிகர் என்ற பந்தா எப்போதுமே விஜயகாந்திடம் இருந்ததே இல்லை. அதனால்தான் அவரை தேடி நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு குட்டி எம்ஜிஆர் என்ற பிம்பத்தை உருவாக்கினார் விஜயகாந்த். அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றன.

அதிலும் குறிப்பாக விஜயகாந்த் சுந்தராஜன் கூட்டணி எப்போதுமே ஒரு வெற்றிக் கூட்டணியாகவே அமைந்திருந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் வைதேகி காத்திருந்தாள் படம் ஒன்றை சொல்லலாம். அது எப்பேற்பட்ட வரவேற்பை பெற்றது என அனைவருக்கும் தெரியும். இப்படி வெற்றிக் கூட்டணியாக வலம் வந்த இவர்களுக்குள் ஏதோ சில கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: கார்த்திக்கை வச்சு படம் எடுக்கிறது கஷ்டம்… சுந்தர் சி மட்டும் எப்படி அவ்ளோ படம் எடுத்தாரு தெரியுமா?

ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சுந்தராஜன் விஜயகாந்தை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். அப்படி என்ன பிரச்சினை என்பதை பற்றி சித்ரா லட்சுமணன் கூறினார். விஜயகாந்தை எப்போதெல்லாம் பார்க்க வேண்டும் என சுந்தராஜன் நினைக்கிறாரோ அப்போதெல்லாம் போய் பார்த்துவிட்டு வருவாராம். கூடவே கதையையும் சொல்வாராம்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் விஜயகாந்தை பார்க்க முடியாத சூழ்நிலை சுந்தராஜனுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதில் கடுப்பாகித்தான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயகாந்தை பற்றி கடுமையாக விமர்சித்தார் சுந்தராஜன் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: கங்கை அமரனை யாருன்னே தெரியாதுன்னு சொன்ன கனகா… நடந்தது என்ன?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.