Cinema History
36 முறை மோதிய விஜயகாந்த் – சத்யராஜ் படங்கள் : ஜெயித்தது புரட்சிக்கலைஞரா? புரட்சித்தமிழனா?..
விஜயகாந்தும், சத்யராஜூம் சினிமாவிற்குள் சம காலகட்டங்களில் நுழைந்தவர்கள். இருவரது படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. 90களில் தான் இருவரது படங்களும் மோதியுள்ளன. 1990க்கு பிறகு 36 முறை விஜயகாந்த், சத்யராஜ் படங்கள் மோதியுள்ளன. என்னென்ன? ஜெயிச்சது யாருன்னு பார்ப்போமா…
1990 விஜயகாந்த் புதுப்பாடகன், சத்யராஜ் உலகம் பிறந்தது எனக்காக. இதுல ரெண்டும் சூப்பர்ஹிட். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு சிறையில் பூத்த சின்னமலர், சத்யராஜிக்கு வேலை கிடைச்சிடுச்சு. ரெண்டும் சூப்பர்ஹிட். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு சத்ரியன், சத்யராஜிக்கு நடிகன், மல்லுவேட்டி மைனர் படங்கள் ரிலீஸ். இதுல மூன்றுமே சூப்பர்ஹிட்.
1991 விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன், சத்யராஜிக்கு புது மனிதன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படமும், சத்யராஜிக்கு பிரம்மா படமும் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 1992 விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர், சத்யராஜிக்கு ரிக்ஷா மாமா ரிலீஸ். இதுல ரெண்டுமே சூப்பர்ஹிட். என்றாலும் விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு பரதன், சத்யராஜிக்கு தெற்கு தெரு மச்சான். இதுல சத்யராஜ் தான் வின்னர்.
அதே ஆண்டில் விஜயகாந்துக்கு காவியத்தலைவன், சத்யராஜிக்கு திருமதி பழனிச்சாமி ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 1993ல் விஜயகாந்துக்கு கோயில் காளை, சத்யராஜிக்கு வால்டர் வெற்றிவேல் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். அதே ஆண்டில் சத்யராஜிக்கு உடன்பிறப்பு, விஜயகாந்துக்கு ராஜதுரை ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர்.
அதே ஆண்டில் விஜயகாந்துக்கு செந்தூரப்பாண்டி, சத்யராஜிக்கு ஏர்போர்ட் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி. 1994ல் விஜயகாந்துக்கு சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜிக்கு அமைதிப்படை ரிலீஸ். இது வெள்ளி விழா. இதுல ரெண்டுமே வெற்றி. அதே ஆண்டில் விஜயகாந்துக்கு ஆனஸ்ட்ராஜ், சத்யராஜிக்கு வண்டிச்சோலை சின்னராசு படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு என் ஆசை மச்சான், சத்யராஜிக்கு தாய் மாமன், தோழர் பாண்டியன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். சத்யராஜின் தாய்மாமனும் வெற்றி.
அதே ஆண்டில் விஜயகாந்துக்கு பெரிய மருது, சத்யராஜிக்கு வீரப்பதக்கம் ரிலீஸ். ரெண்டுமே சுமார் தான். 1995ல் விஜயகாந்துக்கு கருப்பு நிலா, சத்யராஜிக்கு எங்கிருந்தோ வந்தான் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு காந்தி பிறந்த மண், சத்யராஜிக்கு வில்லாதி வில்லன் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். அதே ஆண்டில் சத்யராஜிக்கு மாமன் மகள், விஜயகாந்துக்கு தாயகம் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர்.
1996ல் விஜயகாந்துக்கு அலெக்சாண்டர், சத்யராஜிக்கு சேனாதிபதி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1998ல் விஜயகாந்துக்கு தர்மா, சத்யராஜிக்கு கல்யாண கலாட்டா ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப். 1999ல் விஜயகாந்துக்கு கண்ணுபடப் போகுதய்யா, சத்யராஜிக்கு அழகர் சாமி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.
2000ல் விஜயகாந்துக்கு வல்லரசு, சத்யராஜிக்கு வீரநடை ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு சிம்மாசனம், சத்யராஜிக்கு உன்னைக் கண் தேடுதே ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 2001 விஜயகாந்த்துக்கு வாஞ்சிநாதன், சத்யராஜிக்கு லூட்டி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.
அதே ஆண்டில் விஜயகாந்துக்கு நரசிம்மா, சத்யராஜிக்கு குங்குமப் பொட்டு கவுண்டர் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வெற்றி. அதே ஆண்டில் விஜயகாந்துக்கு தவசி, சத்யராஜிக்கு ஆண்டான் அடிமை ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.
இதையும் படிங்க… அங்க ரஜினி படம் ஒடவே ஒடாது! இழந்த மார்கெட்டை அந்த ஒரு படத்தின் மூலம் மீட்ட சூப்பர்ஸ்டார்
2003ல் விஜயகாந்துக்கு சொக்கத்தங்கம், சத்யராஜிக்கு ராமச்சந்திரா ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 2004ல் விஜயகாந்துக்கு நெறஞ்ச மனசு, சத்யராஜிக்கு மகாநடிகன் ரிலீஸ். இதுல சத்யராஜ் தான் வின்னர். 2006ல் விஜயகாந்துக்கு சுதேசி, சத்யராஜிக்கு கோவை பிரதர்ஸ் ரிலீஸ். ரெண்டுமே சுமார் தான். அடுத்தது அதே ஆண்டில் விஜயகாந்துக்கு பேரரசு, சத்யராஜிக்கு குரு ஷேத்திரம் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 2007 விஜயகாந்துக்கு சபரி, சத்யராஜிக்கு அடாவடி ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் தான்.