அங்க ரஜினி படம் ஒடவே ஒடாது! இழந்த மார்கெட்டை அந்த ஒரு படத்தின் மூலம் மீட்ட சூப்பர்ஸ்டார்

Actor Rajini: ரஜினி என்ற பெயர்தான் இப்போது தமிழ் சினிமாவில் அனைவரும் உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது. எம்ஜிஆர்- சிவாஜிக்கு பிறகு ரஜினியின் மார்கெட்தான் அதிகளவு உயர்ந்திருக்கிறது. 70களில் ஆரம்பித்த தனது சினிமா பயணத்தை இன்று வரை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார். சூப்பர் ஸ்டாராக இந்திய அளவில் பெரும் பெருமைக்குரிய நடிகராகவும் ரஜினி திகழ்ந்து வருகிறார்.

பூர்வீகம் கர்நாடகா என்றாலும் தமிழக மக்கள் கொடுக்கும் வரவேற்பு எல்லையில்லாதது. அப்படியே எம்ஜிஆருக்கு நடந்ததை போலவே ரஜினிக்கும் நடந்திருக்கிறது. எம்ஜிஆரை மலையாளி என்று அந்த காலத்தில் பல பேர் விமர்சித்தனர். ஆனால் அந்த விமர்சனத்தை எல்லாம் தாண்டி ஒரு மாபெரும் தலைவராக தமிழ் நாட்டில் வலம் வந்தார் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: ரஜினியின் முரட்டுத்தனம்… படிக்கும் போதே போலீஸ்நிலையம் வரை சென்ற அதிர்ச்சி சம்பவம்…

அதே போல் ரஜினியையும் விமர்சித்தார்கள். இருந்தாலும் தினந்தினம் அவர் வீட்டு வாசலில் ரஜினியை பார்க்க ஏராளமானோர் கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ரஜினிக்கும் பெரிய ஹைப்பை கொடுத்த திரைப்படமாக பாட்ஷா திரைப்படம் அமைந்தது.

அந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அதில் ரஜினிக்கு ஜோடியாக நக்மாவை போட்டார்கள். அதுவரை அந்த ஜோடியை பற்றி யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்போது நக்மா தெலுங்கில் படு பிஸியாக இருந்த நடிகையாக இருந்தார். ஒரு பக்கம் காதலன் பட வெற்றி ரஜினிக்கு நக்மாவை நடிக்க வைக்கலாம் என்ற யோசனைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: 22 முறை அஜீத்துடன் மோதிய பிரசாந்த் படங்கள்!. ஜெயித்தது அல்டிமேட் ஸ்டாரா?.. டாப் ஸ்டாரா?..

இந்த நிலையில் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா படம் பற்றிய ஒரு தகவலை கூறினார். தெலுங்கில் அப்போது ரஜினிக்கு மார்கெட்டே இல்லையாம். அவரின் படங்கள் தெலுங்கில் ஓடவே ஓடாதாம். ஆனால் பாட்ஷா பட ரிலீஸுக்கு பிறகு அந்த நிலைமை மாறியிருக்கிறது. பாட்ஷா படத்தை நேரடி தெலுங்கு படமாக இல்லாமல் ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு பாட்ஷா படத்தின் ஓட்டம் தெலுங்கில் அனைவரையும் வாயடைக்க வைத்ததாம்.

 

Related Articles

Next Story