சிவாஜி படப்பிடிப்பில் ரஜினி செய்த அந்த வேலை! ஷங்கரை விடவா மணிவண்ணன் பெரிசு?!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று எந்த உயரத்தில் திரை உலகில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்த உயரத்திலே அவர் இருப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைப் பார்க்கலாமா… சிவாஜி திரைப்படத்திலே முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலே அவரோடு இணைந்து நடித்தவர் மணிவண்ணன். அவர் எப்படிப்பட்ட ஆற்றல்மிக்க படைப்பாளி என்பதை உணர்ந்து இருந்தவர் தான் ரஜினிகாந்த். அதன் காரணமாகவோ, என்னவோ படத்துல மணிவண்ணன் நடிக்கிற காட்சிகளில் அவரோடு இவர் நடிக்கும்போது டைரக்டர் ஓகே சொன்னா […]

manivannan, shankar, rajni

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று எந்த உயரத்தில் திரை உலகில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்த உயரத்திலே அவர் இருப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைப் பார்க்கலாமா…

சிவாஜி திரைப்படத்திலே முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலே அவரோடு இணைந்து நடித்தவர் மணிவண்ணன். அவர் எப்படிப்பட்ட ஆற்றல்மிக்க படைப்பாளி என்பதை உணர்ந்து இருந்தவர் தான் ரஜினிகாந்த். அதன் காரணமாகவோ, என்னவோ படத்துல மணிவண்ணன் நடிக்கிற காட்சிகளில் அவரோடு இவர் நடிக்கும்போது டைரக்டர் ஓகே சொன்னா கூட, ரஜினியின் பார்வை மணிவண்ணன் பக்கம்தான் திரும்பும். எப்படி சரியாக இருந்ததா என்று ஒவ்வொரு டேக் முடிந்தபிறகும் மணிவண்ணன்கிட்ட கேட்குறதை வழக்கமாக வைத்து இருந்தார் ரஜினிகாந்த். அந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் ஷங்கர்தான் இயக்குனர்.

அவர் ஓகே சொன்னதுக்கு அப்புறமும் மணிவண்ணனிடம் தன் நடிப்பைப் பற்றி ரஜினிகாந்த் கேட்டார் என்றால், ஷங்கர் ஓவர்டேக் பண்ணிக் கேட்டார் என்று பொருள் கொள்ளக்கூடாது. தன்னுடைய நடிப்பு 100 சதவீதம் சரியா இருக்கணும் அப்படிங்கறதுல அவர் எவ்வளவு ஆர்வம் காட்டினார் என்பதற்கு உதாரணம்தான் அது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

CR
ஆசிரியர்

sankaran v

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →