கௌரவம் படத்துல இரட்டை வேடத்தில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த சிவாஜி!

இருவர் உள்ளம் படத்துக்காக நானும், சரோஜாதேவியும் பங்குபெற்ற காட்சி அன்றைக்கு படமாக்கப்பட்டது. காட்சிக்கான வசனங்கள் எல்லாம் வந்த உடனே இந்தக் காட்சியில நாம பிச்சி உதறிடணும்னு நான் முடிவு செய்து கொண்டேன். அப்போது, அந்தப் படத்தின் இயக்குனர் எல்வி.பிரசாத் என் அருகில் வந்தார். வசனங்கள் எல்லாம் சொன்னார்களா என்று என்னைக் கேட்க, சொன்னாங்க. இந்தக் காட்சியில எப்படி நடிக்கிறேன்னு பாருங்க என்று அவரிடம் சொன்னேன். அதைக் கேட்ட எல்வி.பிரசாத், உங்களோட நடிப்பைப் பற்றிச் சொல்லணுமா? ஒரு காட்சியைச் […]

gowravam sivaji

இருவர் உள்ளம் படத்துக்காக நானும், சரோஜாதேவியும் பங்குபெற்ற காட்சி அன்றைக்கு படமாக்கப்பட்டது. காட்சிக்கான வசனங்கள் எல்லாம் வந்த உடனே இந்தக் காட்சியில நாம பிச்சி உதறிடணும்னு நான் முடிவு செய்து கொண்டேன். அப்போது, அந்தப் படத்தின் இயக்குனர் எல்வி.பிரசாத் என் அருகில் வந்தார்.

வசனங்கள் எல்லாம் சொன்னார்களா என்று என்னைக் கேட்க, சொன்னாங்க. இந்தக் காட்சியில எப்படி நடிக்கிறேன்னு பாருங்க என்று அவரிடம் சொன்னேன். அதைக் கேட்ட எல்வி.பிரசாத், உங்களோட நடிப்பைப் பற்றிச் சொல்லணுமா? ஒரு காட்சியைச் சொன்ன உடனே எவ்வளவு சிறப்பா நடிப்பீங்க என்பது ஊருக்கே தெரியும். ஆனா, இந்தக் காட்சியைப் பொருத்தவரைக்கும் நான் உங்ககிட்ட கேட்டுக்க விரும்புறது என்னன்னா, தயவுசெய்து நீங்க நடிக்காதீங்க என்பதுதான். ஏன்னா, இந்தக் காட்சி சரோஜாதேவி ஸ்கோப் பண்ண வேண்டிய காட்சி. இந்தக் காட்சியில நீங்க கொஞ்சம் நடிச்சாக்கூட, நான் என்ன எபெக்ட்ட எதிர்பார்க்கிறேனோ அது இந்தக் கதைக்குக் கிடைக்காது.

அதனால நீங்க சரோஜாதேவியை நடிக்க விட்டு, நீங்க நடிக்காம இருக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அப்போதான், ஒரு காட்சியில நடிக்கிறது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு நடிக்காம இருக்குறதும் முக்கியம்னு நான் தெரிந்து கொண்டேன். இதே மாதிரி அனுபவம் எங்கிருந்தோ வந்தாள் படத்திலும் எனக்கு ஏற்பட்டது.

அந்தப் படத்துல ஜெயலலிதா அற்புதமா நடித்து ஸ்கோர் பண்ணியிருப்பார். என்னுடைய கையைப் பிடித்து தரதரவென்று அவர் இழுத்துச் செல்வதைப் போன்று ஒரு காட்சி. அந்தக் காட்சியில் மிகச்சிறப்பா நடித்து இருப்பார் ஜெயலலிதா. அந்தக் காட்சி முழுக்க நான் நடிக்கவே இல்லை. அது அவருக்கான காட்சி. அவர் ஸ்கோர் பண்ண வேண்டிய காட்சி. அப்படிங்கறதால நான் அந்தக் காட்சியில நடிக்காம இருந்து விட்டேன்.

கௌரவம் படத்தில் 2 முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன. ஒண்ணு பாரிஸ்டர் ரஜினிகாந்த். இன்னொன்னு அவரது மகன் கண்ணன். அந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் நடிப்பு தனியாகத் தெரிய வேண்டும் என்றால் கண்ணன் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும். அந்தக் குறிப்பிட்ட காட்சிக்கு வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்துவிட்டு, அப்பா இந்தக் காட்சியில நடிக்காதே. நான் பேரு வாங்கணும்னு சொன்னா நல்லாருக்குமா?

அதனாலதான் அந்த 2 கதாபாத்திரங்களிலும் நானே நடிச்சேன். கண்ணன் கதாபாத்திரத்திலும் நான் நடித்து இருந்தாலும் அந்தப் படத்திலே பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாபாத்திரம் தான் பேசப்பட்டது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

CR
ஆசிரியர்

sankaran v

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →