என்னை ஏமாற்றியது அம்பிகாதான்!.. மனம் திறந்த ராதா!.. நடந்தது என்ன?…
சொத்து விவகாரம் பற்றி ராதா விளக்கம்..

80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளாக வலம் வந்தவர்கள் அம்பிகா, ராதா. இருவரும் சகோகதிர்கள். அப்போது முக்கிய கதாநாயகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களிலும் நடித்தார்கள்.
இந்நிலையில்தான், சமீபத்தில் தனது சகோதரி அம்பிகா தன்னிடம் ரூ.47 கோடி செக் மோசடி செய்ததாக ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்..
ஆனால், இந்த புகாரை மறுத்த அம்பிகா ‘நான் ராதாவிடம் செக் மோசடி செய்யவில்லை.. சொத்துக்களை பாகம் பிரித்ததில் எனக்கு ராதா 97 கோடி கொடுக்க வேண்டியிருந்தது. அதற்கு மூன்று செக்குகள் கொடுத்தார். அதில், ரூ.47 கோடி செக்கை நான் வங்கியில் செலுத்தினேன். ஆனால் அந்த செக்கை நிறுத்திவிட்டார். செக்கு கொடுத்ததும் அவர்தான்.. வங்கியில் நிறுத்தியதும் அவர்தான்..
நான் என் தங்கைக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறேன்.. சென்னையில் உள்ள ஏ.ஆர்.எஸ் கார்டன் சொத்தில் என்னுடைய பெயரை எடுத்து விட்டார்கள். அந்த சொத்து எனக்கு கிடைக்கக்கூடாது என்று ராதா நினைக்கிறார். ராதாவுக்கு 5 ஆயிரம் கோடி சொத்துக்கள் இருக்கிறது.. நான் உண்மைய சொன்னால் அவர் சிறைக்குப் போவார்’ என்றும் கூறினார்..
இந்நிலையில்தான், ஒரு வார இதழுக்கு பேட்டி எழுதி ராதா ‘
குடும்ப சொத்துக்களை பிரிக்கும் போது ஏ.ஆர்.எஸ் கார்டன் ஸ்டுடியோ எனக்கு கிடைத்தது.. அப்போது அது புறநகர் பகுதியாக இருந்தால் அம்பிகா அந்த சொத்தில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக சென்னையின் நகர்புறத்தில் உள்ள சொத்துக்களை கேட்டு வாங்கிக் கொண்டார். முக்கியமாக 25 ஆயிரம் சதுரடி கொண்ட தாய் மூகாம்பிகா பில்டிங்கை அவர் எழுதி வாங்கிக் கொண்டார். அப்போது பில்டிங் வாடகை மாதம் இரண்டு லட்ச ரூபாய்.. ஆனால் அந்த கட்டிடத்தையும் விற்று அமெரிக்காவில் சொந்தமாக இரண்டு வீடுகளை வாங்கினார் அம்பிகா..
மேலும், அமெரிக்க குடியுரிமை பெற்றுக் கொண்டார். தற்போது மதுரவாயல் பகுதி விரிவடைந்து மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை வந்துவிட்டதால் ஏ.ஆர்.எஸ் கார்டனின் மதிப்பு உயர்ந்துவிட்டது. எனக்கு சொந்தமான சொத்திலும் பங்குகேட்டு அக்கா அம்பிகாவும், தம்பி மல்லிகார்ஜுனாவும் பிரச்சனை செய்கின்றனர்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.










