முன்பதிவில் மாஸ் காட்டும் Drishyam The Conclusion… முதல் நாளே இத்தனை கோடி வசூல் செய்யுமா?
‘த்ரிஷ்யம்: த கன்க்ளூஷன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது.

இந்த ஆண்டு (2026) மே மாதம் மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் – நடிகர் மோகன் லால் காம்பினேஷனில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படம் ‘த்ரிஷ்யம் 3’.
இப்படத்தின் ஹிந்தி ரீமேக் ‘த்ரிஷ்யம்: த கன்க்ளூஷன்’ (Drishyam: The Conclusion) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகன் ஆக அஜய் தேவ்கன் நடித்திருக்கிறார்.
இதை இயக்குநர் அபிஷேக் பதக் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஷ்ரேயா சரண் நடித்துள்ளார். மேலும், தபு, ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
படத்தை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, டிக்கெட் புக்கிங்கில் இப்படம் மாஸ் காட்டி வருவதாகவும், முதல் நாள் வசூலே ரூ.50 கோடி பண்ணும் என்றும் சொல்லப்படுகிறது.









