Dharmanக்காக மீண்டும் ரஜினியுடன் இணையும் ஷங்கர் பட ஹீரோயின்!

X
Dharmanக்காக மீண்டும் ரஜினியுடன் இணையும் ஷங்கர் பட ஹீரோயின்!

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ‘தர்மன்’. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ராம் பொதினேனி நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, ராஷி கண்ணா நடிக்கின்றனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இந்த படத்தை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் மெகா பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

தற்போது, இப்படத்தில் நடிகை ஸ்ரேயா சரணும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடப்போகிறாரா? அல்லது முக்கிய ரோலில் நடிக்கப்போகிறாரா? என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும். ஆல்ரெடி ஷங்கரின் ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா சரண் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.