D56: தனுஷ் படக்குழுவை ஓட ஓட விரட்டிய கிராம மக்கள்!. இதெல்லாம் தேவையா?..

d56 பட ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்..

d56 pooja

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் தனுஷ். அவரின் அடுத்த படத்தை அதாவது அவரின் 56வது திரைப்படத்தை லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சைமுத்து இயக்கவிருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு கருப்பண்ணசாமி கோவிலில் நடைபெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இந்த பட பூஜையில் கலந்து கொண்டனர்..

இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் எந்த இடத்தில் ஷூட்டிங் நடத்தினாலும் அதற்கு அனுமதி பெற வேண்டும். தனுஷின் 56வது படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் 25ம் தேதி மாரநாடு கருப்பண்ணசாமி கோவில் பூஜை நடந்தது. மேலும், அங்கேயே சில காட்சிகளை படம் பிடித்துள்ளனர். அது ஒரு சிறிய கோவில் என்பதால் அதற்கு படக்குழு அனுமதி வாங்கவில்லை.

எனவே, உள்ளூர் மக்களும் நிர்வாகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ‘கேமரா எடுத்துக்கொண்டு போகிறீர்களா இல்லை நாங்கள் எடுக்கட்டுமா?’ என்று அங்கிருந்தவர்கள் கோபப்பட படக்குழு அங்கிருந்து வெளியேறியிருக்கிறது. அதுவும் கோபமடைந்த தனுஷ் ‘யாருகிட்ட பேசணும்னு எனக்கு தெரியும்’ என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாராம்.

அதன்பின்னர் தான் கோயிலுக்கு அருகே ஒரு மேடையை அமைத்து அங்கே ரசிகர்கள் முன்பு பேசியிருக்கிறார்கள்..

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →