நாளை வெளியாகும் Jailer 2வின் 3 வது சிங்கிள்… வைரலாகும் ப்ரோமோ!
‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது.

ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் புது படம் ‘ஜெயிலர் 2’. இதுக்கு அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைத்துள்ளார்.
ஆல்ரெடி வெளியான இதன் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, மூன்றாவது சிங்கிள் ட்ராக்கின் ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர்.
‘One Name’ என்ற இப்பாடலின் முழு வெர்ஷனை நாளை (செப்டம்பர் 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் சூப்பர் சப்பு எழுதியுள்ளார்.
இப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












