தியேட்டர்ல தான் யாருமே கண்டுக்கல… OTTயிலாவது கவனம் ஈர்க்குமா Sardar 2?

‘சர்தார் 2’ படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

Sardar 2

நடிகர் கார்த்தி அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த ‘சர்தார் 2’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, முக்கிய கேரக்டர்களில் ரஜிஷா விஜயன், நாசர், மாளவிகா மோகனன், அச்யுத் குமார், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, அவினாஷ், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் அதை பூர்த்தி செய்யவில்லை. இதனால் இது கார்த்தியின் தோல்வி படங்களின் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது.

தற்போது, இப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள். வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி பிரபல OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகிறதாம்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →