சர்தார் 2-வை காலி பண்ணிய மண்டாடி!.. வேறலெவலுக்கு போன சூரி!.. அப்செட்டில் கார்த்தி!…
மண்டாடி படத்தின் வசூல் சர்தார் – 2 வசூலை தாண்டியிருக்கிறது

கார்த்திக்கு தொடர் தோல்வி: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவர் நடிக்கும் படத்தில் கதை, திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தால் மட்டுமே ரசிகர்களை கவரும். இல்லையெனில் படம் தோற்றுவிடும்., அதற்கு உதாரணமாக சர்தார் 2 திரைப்படம் மாறியிருக்கிறது.
பொதுவாக எல்லோருக்கும் பிடித்தமான நடிகராக இருப்பவர்தான் கார்த்திக். என்னை விட கார்த்தி சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறான் என சூர்யாவே கூறினார். ஆனால் அப்படிப்பட்ட கார்த்தி கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.
கை கொடுக்காத சர்தார் 2: அவரின் நடிப்பில் வெளியான ஜப்பான், மெய்யழகன், வா வாத்தியார் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. எனவே பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. கார்த்தி, மித்ரன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் அமர்ந்து பேசிய வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனாலும், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை..
கடந்த 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம் கடந்த ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.20 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதேநேரம் கார்த்தியின் சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்த சூரி கதாநாயகனாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மண்டாடி வசூல்: மண்டாடி திரைப்படமும் சர்க்கார் 2 படம் வெளியான அதே 10ம் தேதிதான் உலகமெங்கும் வெளியானது. 6 நாட்களில் இந்த திரைப்படம் ரூ.60 கோடி வசூலை தாண்டிவிட்டது. இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.50 கோடி வசூல் செய்திருக்கிறது. தொடர் தோல்வி திரைப்படங்களால் கார்த்தி அப்செட் ஆகியுள்ள நிலையில், தொடர் ஹிட் படங்களால் சூரி தனது சம்பளத்தை ரூ.35 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது.












