விஜய் அண்ணா போலவே இருக்காரு ஜேசன் சஞ்சய்!.. சிக்மா ஆடியோ லான்ச்சில் சூரி சொன்ன வார்த்தை!..
‘சிக்மா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டு ஜேசன் சஞ்சய் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டு ஜேசன் சஞ்சய் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் பேசிய சூரி, சஞ்சய் தமிழ் குமரன் அண்ணனிடம் சுமார் இரண்டு மணி நேரம் கதையை ஒரு வரியைக்கூட தவறவிடாமல் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கதையை கூறியதாகவும். மேலும், அவர் கதை சொல்லிக்கொண்டிருந்தபோது, விஜய் அண்ணன் பேசிக்கொண்டிருப்பது போல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழ் குமரன் அண்ணனிடம் என்ன அண்ணா, இவ்வளவு அழகாக இருக்கிறார். அப்படியே விஜய் அண்ணனை பார்ப்பது போல இருக்கிறார். இவரை ஹீரோவாக நடிக்கச் சொல்லுங்கள் என்று கூறியதாகவும் அதற்கு தமிழ் குமரன், சஞ்சய்யிடம் ஹீரோவாக நடிக்கும்படி ஏற்கனவே கேட்டுப் பார்த்ததாகவும், ஆனால் தான் இயக்குநராக மட்டுமே விரும்புவதாக சஞ்சய் கூறிவிட்டதாகவும் பதிலளித்தார்.
அதை தொடர்ந்து சஞ்சய்யிடம், நீங்கள் இயக்குநராக தொடர்ந்து பணியாற்றுங்கள். அதே நேரத்தில் எல்லோருடைய ஆசைக்காகவும் எதிர்காலத்தில் ஹீரோவாகவும் நடியுங்கள் என்று சூரி தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.












