Sigmaவில் கேத்ரின் தெரசா குத்தாட்டம் போட்ட பாடல் ரிலீஸுக்கு நாள் குறித்த ஜேசன் சஞ்சய்!

‘சிக்மா’ படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது.

Sigma 4th Single

முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த விஜய் இப்போது தமிழக முதலமைச்சராக உள்ளார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் சீட்டில் அமர்ந்து ஆக்ஷன் கட் சொல்லி ‘சிக்மா’ என்ற படத்தையும் எடுத்து முடித்தே விட்டார்.

இதில் லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படத்தில் வந்த சந்தீப் கிஷன் தான் கதாநாயகன். ஹீரோயினாக ஃபரியா அப்துல்லா வலம் வரப்போகிறாராம்.

ஆல்ரெடி தமன் எஸ் இசையில் ரிலீஸ் ஆன மூன்று பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைச்சது.

தற்போது, நடிகை கேத்ரின் தெரசா குத்தாட்டம் போட்டுள்ள நான்காவது பாடல் ‘சுலோச்சனா’-வை நாளை இரவு 8 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →