நீங்க விஜய் மகனா?.. முதல்வர் மகனா? இல்ல டைரக்டரா?!.. ஜேசன் சஞ்சய் பதில் இதுதான்!..
ஜேசன் சஞ்சய் பேட்டி

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல இயக்குனராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அவரோ சிக்மா திரைப்படம் மூலம் இயக்குனராகிவிட்டார். அவர் இயக்கியுள்ள சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 2ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டு வருகிறார். மேலும், ஊடகங்களுக்கும் அவர் பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி கொடுத்த போது ‘மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?.. முதலமைச்சர் மகனா? அல்லது சூப்பர்ஸ்டாரின் மகனா?.. அல்லது முதல் படத்தை இயக்கும் 25வது இயக்குனரா?’ என கேட்கப்பட்டது.
இதற்கு பதில் சொன்ன ஜேசன் சஞ்சய் ‘அதைப்பற்றி நான் எப்போதும் யோசிக்கிறேன். எனது குடும்பத்தின் பாரம்பரியம் தற்போதைய அரசியல் மாற்றங்களுடன் சேர்ந்து என்றென்றும் தொடரும்.. மறுபுறம், திரையுலகில் எனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிப்பதற்காக நான் இந்த படத்தை இருக்கியுள்ளேன்.. சிக்மா பட்டத்திற்கு பின் படத்தின் வெற்றியும் அதன் மூலம் கிடைக்கும் அறிமுகமும் என் சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள உதவுவதில் கவனம் செலுத்துவேன்’ என தெரிவித்திருக்கிறார்.












