அம்பிகாவோட நோக்கமே வேற!.. அதனாலதான் புகார் கொடுத்தேன்!.. ராதா பகீர்!…
அம்பிகா மோசடி செய்ததாக ராதா தெரிவித்திருக்கிறார்.

1980களில் கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகளில் அம்பிகாவும், ராதாவும் முக்கியமானவர்கள்.
இந்நிலையில்தான் தனது சகோதரி அம்பிகா ரூ42 கோடி செக் மோசடி செய்ததாக சமீபத்தில் நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்..
ஆனால் இந்த புகாரை அம்பிகா மறுத்தார். சென்னையில் உள்ள ஏ.ஆர்.எஸ் கார்டன் தொடர்பான பலகையில் எனது பெயரை எடுத்து விட்டார்கள்.. ராதாவிற்கு பணம்தான் முக்கியம்.. எல்லா நகைகளையும் அவர் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். ரூ.42 கோடி எனக்கு செக் கொடுத்ததும் அவர்தான்.. வங்கியில் அதை நிறுத்தியதும் அவர்தான் எனக் கூறியிருந்தார்.
ஆனால் இந்த புகாரை மறுத்துள்ள நடிகை ராதா ‘ஒரு வருடத்திற்கு முன்பு நான் கொடுத்த செக்கில் 42 கோடி ரூபாயை அவர்களாகவே நிரப்பி, இப்போது வங்கியில் கொடுத்துள்ளனர்.. இதுபோல் செக் வந்திருக்கிறது என என் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்ததால், உடனே வங்கியை தொடர்புகொண்டு அந்தப் பரிவர்த்தனையை நிறுத்திவைத்துவிட்டேன்.
அதன்பிறகும் அதே போன்றதொரு செக்கை மீண்டும் வங்கியில் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்களது நோக்கம் என்ன? பணமின்றி காசோலை திரும்பினால், சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதற்காகத்தானே!.. இந்த மோசடியின் பின்னணியை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால்தான், காவல்துறையில் புகாரளித்தேன்’ என கூறியிருக்கிறார்.
மேலும், குடும்ப சொத்துக்களை பிரிக்கும் போது ARS கார்டன் எனக்கு கிடைத்தது. அப்போது, புறநகர் பகுதியாக இருந்ததால் அம்பிகா அந்த சொத்தில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, சென்னைக்குள்ளே உள்ள சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டார். தற்போது மதுரவாயல் பகுதி விரிவடைந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டதால் ARS கார்டனுக்கு அவரும், என் தம்பி மல்லிகார்ஜுனாவும் சொந்தம் கொண்டாடி பிரச்சனை செய்கிறார்கள்’ என கூறியிருக்கிறார்.










