அசிங்கமா பேசுறாங்க!. எம்.ஜி.ஆர் இலவசமா எதுவும் கொடுக்கல!.. அம்பிகா பேட்டி!…
ARS கார்டன் பற்றி அம்பிகா கொடுத்த பேட்டி

80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளாக வலம் வந்தவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள். அப்போது முக்கிய நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், சிவக்குமார் உள்ளிட்ட பலருடனும் இவர்கள் ஜோடி போட்டு நடித்தார்கள்.
பெரும்பாலான படங்களில் இவர்களே கதாநாயகியாக இருப்பார்கள். ஒருபக்கம் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், ஹோட்டல் என பல தொழில்களிலும் முதலீடு செய்தார்கள். சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு குறைந்த பிறகு இருவரும் தங்களின் வியாபாரத்தை பார்க்க தொடங்கினார்கள். அம்பிகா சீரியலில் நடிக்க தொடங்கினார். ராதா டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வந்தார்..
இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரி அம்பிகா தன்னிடம் ரூ.46 கோடி அளவுக்கு செக் மோடி செய்து விட்டதாக நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அம்பிகாவோ அதை மறுத்தார். இது இரு தங்கைகளுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்று கூறினார்.. சிறுவயதிலிருந்து நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம்.. ஆனால் தற்போது எங்களை பணம் பிரித்துவிட்டது என ஃபீலிங்கோடி பேட்டி கொடுத்திருக்கிறார்..

ஒருபக்கம் சென்னை சென்னை வளசரவாக்கத்தில் அம்பிகா, ராதா இருவருக்கும் சொந்தமான ஏ.ஆர்.எஸ் கார்டன் என்கிற ஒரு படப்பிடிப்பு தளம் இருக்கிறது. இங்கே படப்பிடிப்பு நடக்காத நாளே இல்லை என சொல்லும் அளவுக்கு தினமும் படப்பிடிப்பு டந்து கொண்டே இருக்கும். ஆனால், குடும்ப பிரச்சனை காரணமாக அந்த ஸ்டுடியோ தற்போது மூடப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் இந்த ஏ.ஆர்.எஸ் கார்டன் உள்ள அந்த இடத்தை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது ராதாவுக்கும், அம்பிகாவுக்கும் இலவசமாக கொடுத்தார் என்கிற வதந்தி பல வருடங்களாக இருக்கிறது. பலரும் அதை நம்புகிறார்கள். ஆனால், அம்பிகா இதை மறுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஊடகத்தில் பேசிய அவர் ‘மிகவும் அசிங்கமாக பேசுகிறார்கள்.. எம்ஜிஆரை பற்றியும், ஏ.ஆர்.எஸ். கார்டன் பற்றியும் தப்பு தப்பா சொல்றாங்க.. அது உண்மை இல்லை.. எம்.ஜி.ஆர் எங்களுக்கு எதுவும் இலவசமா கொடுக்கல’ என்று அம்பிகா தெரிவித்து இருக்கிறார். அந்த ஏ.ஆர்.எஸ் கார்டனை எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.












