நீதான் எனக்கு!.. தொகுப்பாளருடன் காதலில் விழுந்த தினேஷ்!.. செம போட்டோ..
காதலில் விழுந்த கெத்து தினேஷ்..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பா.ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டகத்தி திரைப்படம் மூலம் ஹீரோவாக நடித்த தொடங்கியவர் தினேஷ். அந்த படத்திற்கு பின் அட்டகத்தி அவரின் பெயருக்கு முன்னால் சேர்ந்து கொண்டது.
அதன்பின் திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், விசாரணை, ஒரு நாள் ஒரு கூத்து, கபாலி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் ராஜமுருகன் இயக்கத்தில் நடித்த குக்கூ, தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடித்த லப்பர் பந்து ஆகிய படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.. லப்பந் பந்து படத்திற்கு பின் தினேஷ் கெத்து தினேஷாக மாறிவிட்டார்.

தினேஷுக்கு தற்போது 42 வயதாகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில்தான், அவர் விஜே எழிலரசியை காதலித்து வருவது தெரிய வந்திருக்கிறது. தினேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள எழிலரசி ‘வாழ்க்கையில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் ஒவ்வொரு முறையும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்’ என உருகியிருக்கிறார். இதையடுத்து திரை உலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.










