செகண்ட் ரவுண்டில் சார்பட்டா பரம்பரை… தரமான அப்டேட்டை தட்டி விட்ட பா.இரஞ்சித்!
‘சார்பட்டா பரம்பரை’ முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு திரை மொழியுடன் பயணிப்பவர் தான் இயக்குநர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் ‘சார்பட்டா பரம்பரை’.
ஆர்யா கதாநாயகன் ஆக வலம் வந்த இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றது. தற்போது, பா.இரஞ்சித் – ஆர்யா காம்பினேஷனில் ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ ரெடியாகப் போகிறது.
இதன் ஷூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ளதாக பா.இரஞ்சித் எக்ஸ் தளத்தில் படத்தின் போஸ்டரை ஷேர் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் ‘சார்பட்டா பரம்பரை’ முதல் பாகத்துக்கென இருக்கும் ரசிகர்கள் குஷி ஆகியுள்ளனர்.












