ராதாவின் சொத்து மதிப்பு ரூ.5000 கோடி!. உண்மையை சொன்னா ஜெயில்தான்!.. அம்பிகா பகீர்!…

ராதாவின் புகாருக்கு அம்பிகா விளக்கம்..

ambika

நடிகை அம்பிகா மீது அவரின் சகோதரி ராதா செக் மோசடி கொடுத்துள்ள விகாரம் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில்தான் தனது சகோதரி ராதா தன் மீது புகார் கொடுத்தது தொடர்பாக நடிகை அம்பிகா விளக்கம் அளித்திருக்கிறார்.
ராதாதான் எனக்கு காசோலைகளை வழங்கினார்.. எனக்கு காசோலைகளி கொடுத்துவிட்டு வங்கியில் அதை நிறுத்தியதும் அவர்தான். போரூர் ஏ.ஆர்.எஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பதில்தான் பிரச்சனை.. அந்த சொத்திலிருந்து எனது பெயரை நீக்கி விட்டார்கள். ஒருநாள் அங்க போய் பார்த்தால் வேறு பெயர் இருந்த்து.. எனக்கு மயக்கமே வந்துவிட்டது..

ராதாவின் சொத்து மதிப்பு ரூ.5000 கோடி.. நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்வார்.. ராதாவிடமிருந்து எனக்கு 97 கோடி வர வேண்டும்.. சொத்துக்களை பிரித்த வகையில் ராதா எனக்கு 5 காசோலைகளை வழங்கினார்..

கையெழுத்து போட்டுவிட்டு காசோலையை எனது வீட்டில் ஏன் ராதா வைக்க வேண்டும்? எனது வீட்டில் உள்ள காசோலை நான் ஏன் திருட வேண்டும்? காசோலையை கொடுத்தது ராதாதான்.. காசோலையை நிறுத்தியதும் ராதாதான்.. பணம் போனது எனக்குதான்’ என்று கூறியிருக்கிறார்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →