சார் நாம் ஒரு குடும்பம்!.. சீரியஸ் ஆகாதீங்க!.. வெங்கட்பிரபுக்கு எஸ்.கே பதில்!..

வெங்கட்பிரபுவுக்கு எஸ்.கே. பதில்

siva venkat

கோட் திரைப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை வெங்கட்பிரபு இயக்குவது முடிவானது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் என்பதால் சிவகார்த்திகேயனை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு எல்லாம் சென்று கிராபிக்ஸ் தொடர்பான பணிகளை மேற்கொண்டார் வெங்கட் பிரபு.

ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து சிவகார்த்திகேயன் விலகினார். தொடர்ந்து பராசக்தி, மதராஸி போன்ற படங்களில் நடித்தார். தற்போது சேயோன் படதில் நடித்து வருகிறார். இதனால், அப்செட்டில் இருக்கிறார் வெங்கட்பிரபு.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் சிவகார்த்திகேயனின் பெயரை சொல்லாமல் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ‘அவன் உன்னை அசிங்கப்படுத்துகிறான்.. அவன் காலில் விழுந்து நீ படம் பண்ண வேண்டுமா.. இது நமது குடும்பத்திற்கு அவமானம்’ என்று தன் மகன் வெங்கட் பிரபுவிடம் சொன்னதாக அவர் கூறியிருந்தார்.

இந்த செய்தி தீயாக பரவவே தனது எக்ஸ் தளத்தில் இதுபற்றி விளக்கமளித்த வெங்கட் பிரபு ‘ஒரு அப்பாவாக மகனின் படம் தாமதமானதால் அவர் வருத்தப்பட்டிருக்கலாம்.. மற்றபடி நானும் சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள்தான்.. நல்ல கதை அமையும் போது கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன்’ என கூறியிருந்தார்..

இந்நிலையில், அதே எக்ஸ் தளத்தில் பதில் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன் ‘சார் நாம் ஒரு குடும்பம்.. இதுக்கு போய் நீங்க சீரியஸா ரிப்ளை பண்ண வேண்டாம்.. ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.. ஆனாலும் இப்போதும் சொல்கிறேன்.. நான் எப்போதும் வெங்கட் பிரபுவின் ரசிகன்.. உங்களுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.

எனவே இப்போது இல்லை என்றாலும் கண்டிப்பாக வரும் காலங்களில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →