ப்ரோமோ சாங்கை வெளியிட்டு படத்தின் ஹைப்பை ஏற்றும் Anbil Avan டீம்!
‘அன்பில் அவன்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது.

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஜோடியாக நடித்துள்ள புதிய படம் ‘அன்பில் அவன்’. அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில், ரிலீஸ் ஆன இதன் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.
இதற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார், கெளதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த படத்தின் ‘Straight Outta Sarpatta’ என்ற ப்ரோமோ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.












