அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ டிரைலர் எப்படி இருக்கு?.. ஓ மை கடவுளே போல ஹிட் அடிக்குமா?

அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

ashok

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள அன்பில் அவன் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் குறித்து மகளிர் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு மாணவிகளுடன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அப்போது பேசிய அவர், ஓ மை கடவுளே படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அன்பில் அவன் படமும் கண்டிப்பாக பிடிக்கும். ஓ மை கடவுளே என்னுடைய முதல் தயாரிப்பு. அன்பில் அவன் நான் தயாரிக்கும் இரண்டாவது படம். இதுவும் ஒரு அழகான காதல் கதை. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும், ‘96’ திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளரே இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன், இன்னும் பத்து நாட்களுக்குள் படம் வெளியாகவுள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பாருங்க கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நம்பிக்கையுடன் பேசியுள்ளார். மேலும், தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலர் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →