அசோக் செல்வன் 70 அடி உயரத்துல இருந்து குதிச்சத பார்த்து மிரண்டுட்டேன்.. ஹரிஷ் கல்யாண் வியப்பு!..

அன்பில் அவன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அஸ்வத் மாரிமுத்து அசோக் செல்வனுக்காக நேரில் வந்து வாழ்த்தி பேசினர்.

harish

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள அன்பில் அவன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் அசோக் செல்வனுக்காக நேரில் வந்து வாழ்த்தி பேசினர்.

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தான் டிராகன் படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கி இப்போ ரஜினிகாந்தை வைத்து தர்மன் படத்தை இயக்கி வருகிறார். அசோக் செல்வனும் ஹரிஷ் கல்யாணும் நல்ல நண்பர்கள் என்பதால் அவரும் நட்புக்காக வந்திருந்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, அசோக் செல்வன் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் படத்திற்காக 70 அடி உயரத்தில் இருந்து அசோக் செல்வன் குதித்திருப்பது இன்னும் சில ஆண்டுகளில் அவர் பான் இந்தியா அளவில் நடிகராக உயர்வார் என்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.ப்ரீத்தி முகுந்தன் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்று அவரையும் வாழ்த்தி பேசியுள்ளார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, ஓ மை கடவுளே படத்தின் மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். இப்படத்திற்காக அசோக் செல்வனின் முயற்சியையும் பாராட்டினார். மேலும், அன்பில் அவன் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன், இசைக்கு கோவிந்த் வசந்தா ஆகியோர் முக்கிய பலமாக இருப்பதாக கூறினார்.

டிராகன் படத்திலேயே ப்ரீத்தி முகுந்தன் தான் கயாடு லோஹர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், அப்போ அவர் பிசியாக இருந்ததால் நடிக்கவில்லை. அப்போதே, உங்களுக்கு ஒரு சூப்பரான படம் வந்துக் கொண்டிருக்கு என்றேன், அதுதான் இந்த அன்பில் அவன் என்றார்.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →