செப்டம்பர் 25-ஆம் தேதி ரேஸிலிருந்து விலகிய ஒரு படம் இதுதான்!

இந்த வாரம் 4 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகவிருந்தது.

Dorothy Anbil Avan Meesaya Murukku 2 Lenin Pandiyan

திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் பல ஜானர்களில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அப்படி வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் என்று ஆல்ரெடி அறிவித்திருந்தது நான்கு படங்கள் தான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘டோரதி’. ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘அன்பில் அவன்’.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘மீசைய முறுக்கு 2’. டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், ரோஜா, கங்கை அமரன் நடித்திருக்கும் படம் ‘லெனின் பாண்டியன்’.

இந்நான்கு படங்களில் ஒரு படம் மட்டும் ரேஸில் இருந்து விலகுகிறது. அது ‘அன்பில் அவன்’ தான். இதன் ரிலீஸ் தேதியை அக்டோபர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →