தர்மன் டீசருக்காக ரஜினி ரசிகர்கள் இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா?
‘தர்மன்’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.

‘ஜெயிலர் 2’-வை முடித்ததும் கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து கொண்டிருக்கும் புது படம் தான் ‘தர்மன்’. இதில் ரஜினி டாக்டர் ரோலில் வலம் வரப்போகிறாராம்.
தலைருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ராஷி கண்ணா, யோகி பாபு நடிக்கிறார்கள். ரஜினியின் திரையுலக நண்பரும், நடிகரும், இயக்குநருமான கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் ரிலீஸுக்காக ரஜினி ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது, டீசரை வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.












